மருத்துவ வெண்பா - காடை - பாடல் 67

நேரிசை வெண்பா:

கட்டிற் கிடப்பார்க்குக் காட்டிற் படுங்காடை
மட்டவிழுங் கோதாய் மருந்தன்றோ – இட்டமுறச்
சோறுபுகுஞ் சோபையறுந் துன்னோயெ லாமேகும்
வேறுமருந் தேற்றுவதேன் விள்.

குணம்:

படுக்கையில் மிக முடியாமல் இருக்கும் நோயாளிக்கு காட்டில் திரியும் காடை என்ற பறவை இறைச்சிக் கறி மருந்து போன்றதாகும்.

மிக விருப்பத்துடன் சோற்றைச் சாப்பிட முடியும். இரத்த சோகை அகன்று, உடலிலுள்ள மோசமான நோய்களெல்லாம் ஓடி விடும். வேறு மருந்துகளை உடலில் செலுத்த வேண்டியதில்லை என்கிறார் இவ்வாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-20, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே