கொண்டாட்டம் 💥🤝🙏🏽

கொண்டாட்டம் 💥🤝🙏🏽

பண்டிகை எல்லாம் பகட்டாகப் போக
ஸ்வரம் இல்லாத சங்கீதமாக
ஸ்ருதி இல்லாத குரலாக
பண்பாட்டைச் சிதைத்து
போலி கலாச்சாரத்தை அலங்கரித்து
உதட்ளவு சிரிப்பில் ஏகபோக
கொண்டாட்டம்.

தற்போதைய தலைமுறை
நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம்
பாரம்பரிய பழக்க வழக்கம் மறந்த பரிதாபங்கள்
காசு கொடுத்து கடையில்
பட்சணங்கள், இனிப்பு வகைகள் வாங்கி பாஸ்ட்புட் பாணியில் பண்டிகை கொண்டாடும் கோமாளிகள்.

பணக்கார வீட்டுப் பிள்ளை
ஆயிரம் வாலா வெடிக்கிறான்
ஏழை வீட்டுப் பையன் அதை
ஏக்கத்தோடு வேடிக்கை பார்க்கிறான்
ஏன் இந்த ஏற்ற தாழ்வு
ஏன் இந்த பாகுபாடு
இருப்பவர் இல்லாதவருக்கு
கொடுத்து
ஒற்றுமையுடன் தீபாவளி மட்டும் அல்ல
எந்த பண்டிகையையும்
கொண்டாடினால்
அதுவே உண்மையான கொண்டாட்டம்
சந்தோஷம்
மகிழ்ச்சி.

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Jul-20, 10:36 pm)
சேர்த்தது : balu
பார்வை : 101

மேலே