இன்றும் அதையே
கலங்கிய கண்களுடனே,
நியாய விலை
கடையின் முன்னே,
நான் நின்றிருக்க,
கண்ட ஒருவர்
கனிவாய் கேட்டார்,
அய்யா ஏன்? என்று,
பதினெட்டு வயதினில்
மண்ணெண்ணெய்
வாங்க வந்தேன்,
இல்லையே என்றனர்,
இளமையை
இழந்து விட்டேன்,
முதுமையும்
அடைந்து விட்டேன்,
ஆனால் இன்றும்
அதையேக் கூறினர்,
அதனால் தான் என்றேன்!