கற்பனை-எனக்காக வாழும் உனக்காக
உன்னையே உறவென்று
நம்பி கரம் பிடித்தேன்
உன் மூச்சுக்காற்று
எனக்கு சொந்தமானது
என் சின்ன சின்ன
ஆசைகளுக்கும்
சொந்தமான உயிரனாய்....
என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்தாய்....
என் இதழின்
சிறு புன்னகையும்
உனக்கே சொந்தமானது....
என் சிந்தனை
முழுவதும் உன்
நினைவுகளும் காதலும்
கலந்து உள்ளது.....
உன்னில் பாதியா?
உன்னில் மீதியா?
நானும் என் காதலும்...
உனக்காக நான்
மாறினேன் நீயாக...
ஆனால்
என் காதல்
உனக்கு இன்று வரை
உணராத ஊமையாகவே
போனது....
நன்றி