காதல்
காதல்..... அது அது அருளில்லா
மனதிலும் அருள் சேர்க்கும்
பாலைவனத்து நீரூற்று
வறண்ட மனத்திலும்
அருள் சேர்க்கும் அதுவே
அன்பெனும் உயிர்நிலை
வாழ்க்கையின் உயர்நிலை
பக்தனை கடவுளோடு பிணைப்பது
மூர்க்கனுக்கும் வழிகாட்டும்
குழந்தை தாய் இடையிலான பிணைப்பதுவே
ஒரு ஆண் ஒரு பெண் இடையில்
அரும்பும் உன்னத உணர்வும்
அதுவே ஆகும்
அதுவே காதல்