திருந்துவது எப்போ

தேர் திருவிழா போல்
தேர்தல் திருவிழா
வந்து விட்டது...! !

கலர் கலரா கட்சி கொடிகள்
கலர் கலரா வாக்குறுதிகள்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
கல்லை மண்ணாக்குவோம்
மண்ணை பொன்னாக்குவோம்
தேனும் பாலும் ஓடும்
ஏழை என்ற சொல்லே
நாட்டில் இனியில்லை....! !

இது போன்ற
தேன் சொட்டும்
வாசகங்கள்
ஆயிரம்...ஆயிரம்...! !
கேட்டு....கேட்டு
புளித்து விட்டது...! !

ஊர் மக்கள் கூடி நின்றோம்
உறுதி மொழி எடுத்தோம்
இந்த முறை கண்டிப்பாக
நல்லவர்களுக்கு
வாக்களித்து
நல்ல ஆட்சியை
மலர வைப்போம்
என்று முடிவெடுத்தோம்...! !

ஒவ்வொரு
தேர்தலுக்கு முன்பும்
பிரசவ வைராக்கியம் போல்
இப்படிதான் சபதம் எடுப்போம்.
ஆனா...! !
ஊர் மக்கள்
தோற்று விடுவார்கள்
பணம் படுத்தும் பாட்டில்...! !

தேர்தலுக்கு முன்பே...
தங்கள் வாக்குரிமையை
பணத்துக்கு
மண்டியிட செய்து
ஓட்டுக்கு பணம்
கிடைத்த மயக்கத்தில்
தவறானவர்களுக்கு
வாக்களித்து விட்டு...
தெளிந்த பின்பு....! !

தங்கள்
பிரச்னையை சொல்ல
வெற்றி பெற்றவனை
தேடி சென்றால்...! !
இப்போது....! !
அவன் இருப்பதோ
வெற்றி மயக்கத்தில்..! !

மயக்கம் தெளிந்து
மக்கள் திருந்துவது
எப்போ....! ! எப்போ...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jul-20, 9:53 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 82

மேலே