முருகன் துதி

முருகா முருகா என்று மனமுருகி
முருகனை அழைத்தால் வேல்வந்து
நிற்கும் முன்னால் நீலமயிலும் சேவற்கொடியும்
வேல் துயரைப் போக்கும் கொடியவை எல்லாம்
வீழ்த்தி வெற்றியை நாட்டி சேவல்கொடியோடு
பின்வந்த மயிள்மீது ஏறிவருவான் குமரன்
காத்தபின் தரிசனமும் தந்து இன்னும் என்ன
தயக்கம் துதிப்போம் நாளும் முருகனை
மால்மருகன் கருணைக்கடலாவான் அறிந்திடுவாய்
நெஞ்சமே இன்றே இப்போதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jul-20, 7:10 pm)
பார்வை : 80

மேலே