இயற்கை

கார்கால கருமேகம் வந்து வளர
கருங்குயில் சோலையில் கூவிக் கொண்டிருக்க
கோலமயில் ஒன்று அங்கு வந்துசேர
குயிலின் பாட்டிற்கு அழகாய் தனைமறந்தாட
ஏனோ தன்னழகில் மயங்கி மயில்
குயிலை கேட்டது ' என்ன அழகு
உந்தன் குரலில், ஆனால் ஏனோ
அந்த அழகு உந்தன் உடலில்
காணவில்லையே ' அதற்கு குயில் சொன்னது
கோலமயிலே பறவையில் உன்னழகு தனியே
ஆனால் ஏனோ உன்குரல் கர்ணகடூரம் ;
வெட்கிப்போன மயில் பதிலேதும் சொல்லாது
அங்கிருந்து மெல்ல நழுவியதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jul-20, 1:44 pm)
Tanglish : iyarkai
பார்வை : 273

மேலே