பேரம் பேசிய பூமி

ஈரக்குலை அறுக்க
EIA 2020 ஆயுதமெடுத்து
இந்திய பாராளுமன்றம்
பதுங்கி இருப்பவரே..!

இப் பிரபஞ்சம் கெஞ்சி
இரு நொடி அனுமதி வாங்கி
இந்தியா வந்திருக்கேன்

ஏறெடுத்துப் பாருமையா
ஏளனம்தான் செய்யாம

சுத்தி சுழலுற என்ன
சுருட்டி வைக்காதீக

அடர்த்திக் கிரகம் என்ன
அடித்து நொறுக்காதீக

ஓசோன் உண்ண
ஓநாய்களுக்கு பந்தி விரிக்காதீக

சமுத்திர சந்ததிகள
சாக்கடை ஆக்காதீக

சூரியன சுத்தி வரும் என்ன
சுட்டு பொசுக்காதீக

காடளிக்க காலனுக்கு
கடுதாசி இடாதீக

மலைச் சதைகள் பிய்க்க
மனு எழுதாதீக

பூதங்க அஞ்ச
புதைக்கப் பாக்காதீக

மூச்சுக்காற்று தொழிற்சாலைகள
முறிச்சி எறியாதீக

அணுக்களால ஆன எனக்கு
அணுக்கழிவு ஊட்டாதீக


உயிரிக்கு உயிரளிக்கும் என்ன
உண்ண எண்ணாதீக

வயித்துப் பசிக்கு
வானத்த விக்க நினைக்காதீக

EIA - திருத்தி திருத்தி
எம்மண்டய உடைக்காதீக

சூரிய குடும்பம் என்ன
சுக்கு நூறா நசுக்காதீக

சுரண்டல் முதலாளிகளின்
மிரட்டல் முனகலுக்கு
EIA திருத்தியவரே
எழுந்து போகாம
இருந்து கேளுமையா

கெவர்மெண்ட் காதுக்கு - என்
கெஞ்சல் புரியாது
விண்மீனு புத்தி சொல்லி
விஞ்ஞானம் கேட்காது

கார்ப்பரேட்டு கர்ப்பதாரரே..
கவனமா கேளுமையா

தீப்பிழம்பாய் எழுகிறேன்
தீயிலிடுமையா EIA 2020ய

பூகம்ப தூதனுப்புகிறேன்
பூமிக்குள்ள புதையுமையா

சுனாமியாய் வருகிறேன்
சுருட்டி எறியுமையா

சுழல்காற்று தருகிறேன்
சுழற்றி வீசுமையா

வெள்ளம் பெருக்கி
வேண்டல் செய்கிறேன்
வெள்ளத்திற்குள் இடுமையா

ஆறறிவுக்காரரே..!
அரநொடி கேளுமையா
கோள பொடிச்சி போட்டேனும்
கோபத்த நான் காட்டபோறேன்

என் வேகமோ ஓய்வோ
உங்களுக்கு ஆகாது

சங்கடத்தில் ஆழ்த்தாம
சட்டென கிழியும்
கோள் காக்க சட்டம் - இன்னும்
கடினமா விதியும்

எழுதியவர் : செ.பா. சிவராசன் (29-Jul-20, 1:47 pm)
பார்வை : 100

மேலே