அவள்
கலைகளெல்லாம் அள்ளித்தரும் உந்தன் மதிமுகம்,
கலைகளெல்லாம் அடக்கிய மதி,முகம் போல்
கலைகளெல்லாம் நீங்கி மதியும் இருளாகும்
மாதத்தில் ஓர் நாள் , நீயோபெண்ணே
கலைகள் அலங்கரிக்கும் தேயா முகத்தாள்
என் மஞ்சம் அலங்கரிக்கும் மண்ணின்பொன்னிலா