துரோகம்

அய்யோ!! துரோகம் செய்துவிட்டானே என்றவனின் மனக்குமுறலைக்கேட்டு அவன் மனம் ஆக்ரோசமாகப்பேசத் தொடங்கியது.... ஏன் இந்தக் குமுறல்?? உன் தேகம் உரசிப்போனக் கத்திகளுக்கு நீ பதில் சொல்ல தேவையில்லை. அவை உன் உடலை மட்டுமே உரசிவிட்டு போனது... உன் வீரத்தை அல்ல. உரசிய ஓர் நொடியில் உன் ரத்தம் மண்ணில் சொட்டியது. அது ரத்தம் அல்ல நீ செய்த யுத்தத்தின் அர்த்தம். அவன் துரோகத்திற்கு துரோகம் வரும் காலம் - அடுத்த நொடியிலேயும் நிகழ்ந்திடலாம்.... காத்திரு! செய்த துரோகத்தை மறந்திடாமல்.... விதையினில் பாதி விஷமாகிப் போனால் விருட்சமாய் வளந்த மரம் கூட வேர் விட யோசிக்கும்... எதை வேண்டுமானாலும்
ஏற்றுகொள்!! நம்பிக்கை துரோகத்தை தவிர !!

துரோகியை மறந்துவிடு..... ஆனால் ஒருநாளும் அவன் செய்தத் துரோகத்தை மறந்துவிடாதே....

✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (5-Aug-20, 11:21 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : throgam
பார்வை : 119

மேலே