கொரானாவெனும் குளம்படி

சும்மா அதிருதில்ல - ன்னு
சும்மா சொன்னத கேட்டு
கம்முன்னு கிடந்தவொரு உலகத்த
அதிரவச்சு அலறவச்சு மிரளவச்சு
முடக்கிப்போட்டு புலம்ப வச்ச
கொரானாவே,

பணக்கார நாடுகளிலும் பாரம்பரிய நாடுகளிலும்
பதைபதைக்கும் மருத்துவமனைகளில்
பற்றாமல் போனதே மருத்துவ வசதிகள்....

ஆள்கொல்லி நோயல்ல எனினும்
அடிமேல் அடிவைத்தால் எதிர்ப்படும்
எதிரியென ஓங்கியடித்து ஒடுக்கிசெல்லும்
உனக்குத்தெரியும் உன் ரூபம்

எதிர்ப்புசக்திஎனும் வெற்றிட விளையாட்டென்று
இயற்கை உணவுகளில் உன் எதிர்ப்பாற்றல்
என்பது இப்போது தான் இவ்வுலகம் அறிந்தது.

நிதானமாய் வாழ வேண்டிய மனிதர்களுக்கு நேரமில்லை
நலமான உணவுகளை நன்கு செரித்துண்ண
செயற்கை உணவுகளிலேது சிறப்பான உணவு
செய்வதறியாது திகைக்குதே மருத்துவ உலகம்.

ஏழைகளால் இனி வாழவே முடியாதென உன்னால்
மட்டும் ஒரே தீர்மானம் சத்துணவில்லை எனில் சாவே.

எழுதியவர் : செல்வமணி (6-Aug-20, 7:39 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 65

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே