பச்சோந்திகள்
போன வாரம் முழுவதும் ஒன்றாக
இருந்து எங்களோடே சாப்பிட்டான்
நல்லவன் போல் இருந்தான்
ஏதுமறியா குழந்தை போல
விஷஜந்து இவனென்று எனக்கு
அடையாளம் தெரியல்லியே
பச்சை பிள்ளை இவனென்று
பார்த்துப்பார்த்து உபசரித்தேன்
நேற்றய புதிய மனிதன் என்
நெஞ்சத்தை நோக வைத்தான்
நல்லவர் போல்தான் நயமான
பேச்சை வஞ்சகரும் பேசுகின்றார்
புண்ணாகிப் போகிறது மனது
இவர்களின் புரட்டு தனமான
பொய்களால் மெய்களால்
இவர்களை கழுவ முடியவில்லை
சாம்பலாக தெரிகிறார்கள்
நம்பி கையை வைத்தால் தானே
தெரிகிறது நெருப்பென்று
நம்ப வைத்து கழுத்தறுக்கின்றார்
நாணயம் இல்லாத மனிதர்கள்
நம்பி பழகும் போது தானே
உனக்கு தெரியவரும் இவர்களது
உண்மையான சுயரூபம்
எங்கே சுற்றி நீ யாரோடு
பழகினாலும் அங்கே ஒரு
துரோகம் உலை வைக்க
காத்திருக்கும் உண்மைதான்
பாசமான மனிதர்கள் என்று
பழகிடாதே இவர்கள்
வேடதாரிகளும் அல்ல
பச்சோந்தி கூட்டங்களே