கவிதையடி நீ எனக்கு

கவிதைக்கு அழகு தருவது அதில்
பொதிந்திருக்கும் ஓசை அதுவே சந்தம்
கொஞ்சம் கம்பனின் பாவொன்றை எடுத்து
வாய்விட்டு படித்தால் புரியும் அது
உன்னை அறியாமலே பண் சேர்த்து பாடவைக்கும்
நல்ல கவிதைக்கு அழகு அது

பெண்ணே நீ நடந்து வரும் அழகில்
கம்பரசம் காண்கின்றேன் கேட்கின்றேன் நான்
கவிஞன் நான் தேடி வந்த கவிதை அல்லவா நீ
கவிதையே நீயாகில் நான் யாத்திட
ஏதும் இல்லையே இனி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-20, 10:14 pm)
பார்வை : 190

மேலே