காதோரம் ரகசியமாக

காதோரம் ரகசியமாக .

என் உயிரில் கலந்தவிட்ட உறவே.
எப்போதும் நான் நினைக்கும் நினைவே.
என் இதயகோயிலில் குடியேறிய இனியவளே.
என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற இன்ப வெள்ளமே.
என் மனம் என்னும் மேடையில் நடனமாடும் தேவதையே.
என் தூக்கத்தில் கனவில் வந்து என்னை கட்டி அனைக்கும் இதயக்கனியே.
என் கரங்கள் பற்ற துடிக்கும் சின்ன இடையாளே.
என் உதடுகள் சுவைக்க  துடிக்கும் தேன் சொட்டும் இதழாளே.
என் விரல்கள் வாசிக்க துடிக்கும் அழகிய வீணையே.
என் ஆசையை நிறைவேற்ற வந்த இதயராணியே.
என் வாழ்க்கையை இனிதாக மாற்ற போகும் எழில் வண்ணமே.
என் சுவாசத்தில் கலந்துவிட்ட மூச்சு காற்றே.
என் காதல் வானில் பவனி வரும் வென்னிலவே.
என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரியும் காதல் இளவரசியே.
என் காதோரம் நம் காதலை ரகசியமாக சொல்லி விட்டு போகும்
அன்பு காதலியே.
என் வாழ்நாளில் கண்டெடுத்த அதிசயமே.
- பாலு.

எழுதியவர் : பாலு (6-Aug-20, 10:30 pm)
சேர்த்தது : balu
பார்வை : 161

மேலே