போராட்டம்

பலத்துக்கும் பலவீனத்துக்கும் இடையில் நிகழ்வதேப் போராட்டம்.. பூமிக்கடியில் இடம் பிடிக்கப் பூமியின் மேல் நடக்கும் போராட்டம்.... மகிழ்ச்சி என்பது ஒரு நொடிக்கு மட்டும், நிம்மதி ஒரு மணி நேரம், ஏமாற்றம் ஒரு நாள், போராட்டம் என் வாழ்நாள் முழுவதும்.. வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்க்கொள்ள வேண்டும், எட்டிப்பிடிக்கவேண்டும், விடைக்காணவேண்டும்..... ஓடினால் தூரத்தும், ஒதுங்கினால் என்னை கோழை என்று ஏளனம் பேசும், எதிர்த்து நின்றால் சவால் விடும்... சிரிக்காதா மனம் கூடச் சிந்தனையிலும் சினம் கொள்ளும்... கருவறையிலிருந்து, கல்லறை வரைத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கைப் போராட்டம்.... இவை வெறும் எழுத்துக்கள் அல்ல, என் மனதின் ஆதங்கங்கள்....
தொட்டுவிடும் தூரத்தில் வானமில்லை ....... அதை தொடாமல் விடும் எண்ணம் எனக்கில்லை.........
...................... போராட்டம் தான் வாழ்க்கை எனில் போராடத் தயங்காதே...................

✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (6-Aug-20, 11:45 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : porattam
பார்வை : 57

மேலே