நகைச்சுவை துணுக்குகள்21

அம்மா தாயே, பிச்சை போடுங்க

ஆமாம். காலங்கார்த்தாலே வந்துட்டான் பிச்சை கேக்க. போ, போ.

- - - -
அம்மா தாயே, பிச்சை போடுங்க

மத்தியான வேளையிலே பிச்சை எடுக்க வந்துட்டான். வேறே நேரமே உனக்குக் கிடைக்கல்லியா? போ, போ.
- - - -
....
அம்மா தாயே, பிச்சை போடுங்க

ஏம்பா, சாயந்திர வேளையிலே யாராவது பிச்சை போடுவாங்களா? போப்பா தொந்திரவு பண்ணாம.
- - - -  
......
அம்மா தாயே, பிச்சை போடுங்க

ஏம்பா, பிச்சை கேக்கறதுக்கு ஒரு நேரம் காலம் கிடையாதா? ராத்திரி வேளையிலே பிச்சை கேக்க வந்துட்டியே. போ,போ.
********************
உங்க பையனுக்கு ஏத்த பொண்ணு. ரொம்ப நல்ல மாதிரி. நல்ல படிப்பு. நல்ல குடும்பம். கொஞ்சம் கருப்பு. ஆனா உங்க பையன் அளவுக்கு கருப்பு இல்லை.


பொண்ணு கருப்புன்னா எங்களுக்கு வேணாம்.
********************
நம்ம தலைவர் இறந்த அன்னிக்கு தமிழ்நாடு பூராவும் எத்தனை பேர் செத்தாங்கங்கிற லிஸ்டை அவசர அவசரமா தயார் பண்ணினாங்க.
எதுக்கு?

தலைவர் செத்த துக்கம் தாங்காம இத்தனை பேர் செத்துட்டாங்கன்னு கணக்கு காட்டத்தான்.
******************
நீங்க அவளுக்குப் பிச்சை போடாதீங்க.

ஏன்?

கண் தெரியல்லே அம்மான்னு சொல்லிட்டு என்னை மகாலக்ஷ்மி மாதிரி இருக்கேன்னு சொல்லி பிச்சை கேக்கறா? எப்படித் தெரிஞ்சது அவளுக்கு நான் அவ்வளவு அழகா இருக்கேன்னு. இதுலே இருந்தே தெரியல்லியா அவ ஏமாத்தறான்னுட்டு.


நிஜமாவே அவளுக்குக் கண் தெரியல்லை. தெரிஞ்சி இருந்தா உன்னை மகாலக்ஷ்மின்னு சொல்லி இருப்பாளா?
**************

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (8-Aug-20, 5:11 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே