நகரரக வாழ்க்கை
இன்பங்கள் இரட்டிக்க
இதயமும் இயந்திரமாய்
கண்கள் கலங்குகிறது
காட்டாறு மழையின்றி
அன்பு கிடக்குதய்யா
ஆதரவின்றி இல்லத்தில்
சகிப்பு வெறுக்கிறது
சமாதானம் சண்டையிட
இடமின்றி இடறுதய்யா
விளைநிலங்கள் வீடாகி
வாகனம் பெருகியது
பிராணவாயு பிளவிட
நகரம் நலிகிறது
நலமும் குறைகிறது
இதுவன்றோ அதிசயம்
வளருகிறது விஞ்ஞானம்
சரவிபி ரோசிசந்திரா