அந்த பரமன்
அந்த பரமன்
எங்கும் நிறை பரம்பொருளை
நம் அறியாமையால் தேடினோம்
எல்லாம் அறிந்தது போல் நம்மை
நாமே ஏமாற்றிக்கொண்டோம்
தன்னை வெல்ல யாருமில்லை
என ஆரவாரித்து ஆடினோம்
ஒரு சிறிய கிருமியால் நம்மை
வென்று தஞ்சமடைய வைத்தான்
அந்த பரமன்
அந்த பரமன்
ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும்
பயம் எனும் தீயை மூட்டினான்
இல்லங்கள் கோவில்களாக மாறி
அவனை எப்போதும் நினைக்க செய்து
தான் என்ற அகந்தையை அழித்து
உண்மையை அறியவைத்து
இயலாமையை உணர்த்தினான்.
மக்கள் கண்ணில் மரணபயம் தெரிய
வழி எதுவும் இல்லாமல் வலுவிழக்க வைத்தான்
தஞ்சமடைத்தோரை கைதூக்கி
தன்னை அறிய வைத்தான்
இனியாவது அவனை நினைத்து
அவன் பாதம் பற்றி சரணடைவோம்