முதல் மரியாதை

அம்மா....
அப்பா ....
என்ற வார்த்தைகளில்
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர் மெய் எழுத்து
மூன்றும் சங்கமம்..! !

முக்கூடலில் முத்தான
இந்த "அம்மா" என்ற
வார்த்தை தான்
குழந்தைகளின்
முதல் வார்த்தை
இதுவே
"தமிழ் மொழிக்கு"
நாம் செய்யும்
"முதல் மரியாதை"
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Aug-20, 2:15 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : muthal mariyaathai
பார்வை : 120

மேலே