காதல்
தாகம் தண்ணீர்த் தேடி அலைந்தேன்
வேகமாய்ப் போன என்முன் நீவந்தாய்
புன்னகை ஏந்திய பார்வைக் கூட்டி
தாகம் தீர்ந்தது புரிந்தது எனக்கு
எடுத்தது காதல் தாகம் தீர்த்தது
உன் பார்வையாம் நீர்