களவொழுக்கமும் காதலும்

களவொழுக்கமும் காதலும்

நேரிசை ஆசிரியப்பா

ஆலகால விஷத்தைக் கூட நம்பலாம்


ஊரென்றால் தொகுப்பாய் குடிகள் வாழ்வார்
ஊர்தோப்பில் தனியேத் தோப்பாம் பாவோட்ட
கைகோளர் தெருவங்கே அருகுண்டு தெரியுமா
வைக்கோல் போரை வீட்டின்பின் புறத்தில்
கொட்டிக் கொட்டனமும் போடுவர் உழவரே
குடியானவத் தொகுப்பைப் பள்ளித் தெருவென்பார்
செக்கோட்டும் வாணியர் தெருவுண்டு
சேரா அக்கிரகா ரமும்தனியாம் கண்டிடே


சான்றோர் அன்று வகுத்தவழி தொகுப்பாம்
ஆன்று சொன்னவழி அருமை யாம்பாரு
வகுத்தாரே தொகுப்பாய் கிராம வீதிகள்
பாகுபாடி லாவழ்ந்தார் உறவோடு றவாகத்த்தான்
கழிப்பிடமும் பிரித்தார் ஆண்பெண் ணுக்கும்
ஜாதிக்கும் பிரித்தார் பாயா வீதி
சாதிக்கோர் தலைமை வைத்தார்
வீதிநோக்க விவரங்கள் விநோதம் பாரே

ஒப்பனைக் காரவீதி தெருவாம் ஒதுவார்க்கும்
மறவர் கள்ளர் பள்ளர் வீதியென்றார்
குறவர் கொட்டாய் பரதவ குடிசையாம்
துறையில் வண்ணான் தோப்பில் சாணானும்
நிறைவாய் இடைவெளி அதிகமே
கரைபடா வாழ்ந்த சாதியைச் கண்டாரே

அருந்துதிப் பாளையம் பிரித்தார் சேரியுடன்
இனமினம் இணைந்தால் யேற்படாக் கலப்புமே
அவனவன் இனத்தில் காதல் கண்டாரே
இனக்கல வரம்தவிர்த்தார் இவனே
இன்னலற்ற வாழ்க்கையும் இனிதாய் நடந்ததே

எழுதியவர் : பழனிராஜன் (15-Aug-20, 12:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 73

மேலே