மாமனிதர் மகாத்மா 🙏🏽
மாமனிதர் மகாத்மா 🙏🏽
மண்ணில் உன் போல் தலைவன் இனி பிறப்பாரோ
மானுட பிறவியின் மகோன்னதமே
கருனையின் வடிவமே
சாந்த சொரூபியே
உண்மையின் உரைகல்லே
அகிம்சை என்ற ஆயுதத்தை அறிமுகப் படுத்தி
கத்தியின்றி, ரத்தமின்றி
விடுதலை வேள்வியைத் தவம் என நடத்தி
மாபெரும் வெற்றி கண்ட புரட்சி நாயகனே.
பாரதத்தின் தந்தை
பார் புகழும் தலைவன்
மனிதருள் மாணிக்கம்
இந்தியர்களின் அடையாளம்
மாமனிதர் மகாத்மா.
மத நல்லிணக்கம்
தீண்டாமை ஒழிப்பு
சமதர்ம சமுதாயம்
எல்லோருக்கும் கல்வி
பெண் முன்னேற்றம்
கிராம மேம்பாடு
என்ற மகாத்மாவின் கனவு மெய்ப் பட
அவர் வழி நடப்போம்
உண்மை, சத்தியம், நேர்மை கடைப்பிடிப்போம்.
தலைவருக்கெல்லாம் தலைவர் மகாத்மா வழி
சென்று வாழ்க்கையை வெற்றி ஆக்குவோம்.
- பாலு.