எங்கே சுதந்திரம்
இதயம் தழுவும்
காற்றுண்டு
இனிமை பொழியும்
மழையுண்டு
கலைந்து திரியும்
மேகமுண்டு
அலைந்து மகிழும்
பறவையுண்டு
நதியுண்டு மலையுண்டு
அடர்ந்த அடவியுண்டு
என்றும் சுதந்திரம்
எப்போதும் சுதந்திரம்
பொய்மை இல்லை
உண்மையே எல்லை
அவதந்திரம் இல்லை
எப்போதுமில்லை
தனக்கந்திரத் தொல்லை
ஆறறிவு மானுடா
தந்திரம் மந்திரம்
வாழ்வெல்லாம்
உனக்கு யந்திரம்
இதனால் தானா
தொலைத்தாய்
உன் சுதந்திரம் ?