சுதந்திர தினம்

சுதந்திர தினம்
○•○
தந்திரமு மில்லை யொரு
மந்திரமு மில்லை வேறு
எந்திரமு மில்லை அடிமை
தனத்தை ஒழித்துக் கட்டி

சுதந்திரம் அடைந்தோம்
நமது தேசத்தில் அயலான்
வேண்டு மானாலும் வாழ
அனுமதி உள்ளது நமது

தேசத்தை அயலான் எவனும்
ஆள அனுமதி கிடையாது
கேள்வி முறை யேது மில்லாமல்
உள் நுழைந்தோரை அகிம்சை

பலத்தால் வெளியே தள்ளினோமே
அந்த நாள் தான் தம்பி இந்த நாள்
அயலான் கொள்ளை அடித்தான்
நூறாண்டு காலங்கள் வரையில்

காந்தியின் அகிம்சை திறமையால்
அகிம்சை பலமாகியதே வென்றது
அகிம்சை போராட்டமதைக் கண்டு
அயலானின் ஆயுதம் தோற்றது

நாட்டைவிட்டு வெளியேறினான்
கடலில் நீந்திக் கொண்டோடினர்
இழப்புகள் ஆயிரம் வந்தபோதிலும்
ஈன்றெடுத்த தாயிக்கு நிகராகவே

தேசத்தையும் காப்பது நம் கடமை
நினைவில் வைத்திட மறவாதிரு
தற்போது இக்கட்டான சூழ்நிலை
பழைய நிலைக்கு பாடுபடுவோம்

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (15-Aug-20, 7:15 pm)
Tanglish : suthanthira thinam
பார்வை : 52

மேலே