என் ஆருயிர் நண்பன்
வலியால் விழியில் நீர்
வழிகையில் தன் கைக்
கொண்டுத் துடைக்கின்றவன்,
துவண்டிருக்கும் போது
தூண்டுகோலாய் அவன்,
நிலை தடுமாறும் போது
ஊன்றுகோலாய் அவன்,
பாதை மாறாமல் பயணம்
செல்ல வழிக் காட்டியவன்,
இருள் சூழும் போது
ஒளி விளக்காய் அவன்,
நல்லவரோடு என்றும்
கலந்திருக்கச் செய்தவன்,
தீயவர் நிழல் கூட
தீண்டாமல் காத்தவன்,
நான் மகிழ்ந்தால்
தான் மகிழ்ந்தவன்,
சில நேரங்களில்
பெற்றோராய், உற்றார்
உறவினராய், உடன்
பிறப்புமாயும் அவன்,
இமையாய் மட்டுமல்ல
சுமைதாங்கியும், அவனே
அன்பால் எனை ஆளும்
என் ஆருயிர் நண்பன்!!!