வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்

நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு என்பதால் சீதா அவளது கணவன் தினேஷை அவசரப்படுத்தினாள் . சீக்கிரம் கிளம்புங்க ...காய்கறி மற்றும் சில மளிகை பொருட்கள் தேவைப்படுது . வாங்கிவந்துடலாம் , அப்புறம் கூட்டம் சேர்ந்துவிடும் என்றாள் . நான் வந்து சமைக்க வேண்டும் ...பசங்க தூங்கறாங்க ... அம்மா இருக்காங்க பார்த்து கொள்வார்கள் என்றாள் . அவன் எழுந்து பேன்ட் அணிவிக்க சென்றவனை , அதெல்லாம் பரவாயில்லை , லுங்கியே போதும் ... நேரமாகுது என்றாள் . தினேஷ் முகத்தைக் கழுவிக் கொண்டு விரைந்து செயல்பட்டான் . இருவரும் அவனது முதல் குழந்தையான இருசக்கர வாகனத்தில்
பயணமானார்கள் மார்க்கெட்டை நோக்கி.

சீதா ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பட்டியலின்படி நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி
பொருட்களை வாங்கினாள் . உங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டுமா என்றதும் , ஒன்றும் தேவையில்லை , கிளம்பு போகலாம் என்று கூறினான் .

திரும்பி வந்து கொண்டிருக்கையில் , ஓரிடத்தில் சாலை ஓரமாக ஒரு பெண் கையில் ஒரு பையுடன் நடந்து சென்றதை பார்த்தவுடன் , சீதா அவளை உற்று நோக்கினாள் . உடனே அவள் தினேஷ் கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க , அங்கே பாருங்க , எனது தோழி வாணி போகிறாள் . அவன் என்னவென்று புரியாது , உடனே நிறுத்தினான் . இந்தாங்க , இந்த பையை கையில் பிடியுங்கள் , இதோ வருகிறேன் என்று வாணியை நோக்கி விரைந்து நடந்தாள் . அருகே சென்றதும் , ஏண்டி வாணி எங்கே போகிறாய் ? என்ன செய்கிறாய் இப்போது ? ஏன் தனியே செல்கிறாய் ? என்று அடுக்கடுக்காக கேள்விகளால் துளைத்தாள் . வாணியோ இவளை எதிர்பாராத காரணத்தால் சற்று அதிர்ச்சி அடைந்து , பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு , பேச ஆரம்பித்தாள் .

அவளை நெருக்கத்தில் கண்டதும் சீதாவின் முகம் மாறியது . கவலையில் தோய்ந்தது . சீதா அவள் கடைகளுக்கு தினேஷுடன் சென்று வருவதையும் , வழியில் அவளை கண்டதையும் ஒரு நொடியில்
கொட்டிவிட்டு , சற்றுத் தள்ளி நிற்கும் அவளின் கணவனை கைகாட்டினாள் . அந்த இடைப்பட்ட நிமிடங்களில் வாணி விக்கிவிக்கி அழ ஆரம்பித்தாள் .

அதிர்ந்தபோன சீதா அவள்மீது கைவைத்து தேற்ற ஆரம்பித்தாள் . சிறிது நொடிக்குப்பின் வாணி அவளது கணவன் அவளைக்கைவிட்டு வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டதையும் , அதனால் அவளது தந்தை அதிர்ச்சியில் கைகால்கள் செயலிழந்து ரொம்பவும் முடியாத நிலையில் படுக்கையில் நிரந்தரமாக விழுந்து கிடப்பதையும் , அவரது தாய் மாரடைப்பினால் இறந்ததையும் கூறி மீண்டும் அழ ஆரம்பித்தாள் .

ஒருவாறாக வாணி அவளைத் தேற்றி பேச ஆரம்பித்தாள் . இங்கே பார் வாணி , இந்த நேரத்தில் நீ தந்தைக்கு ஆற்றிடும் சேவை மிகவும் அவசியம் மற்றும் உயர்ந்த செயல் . நீ மட்டுமே அவரை கவனித்துக் கொள்ள முடியும் . உனது கடமையும் கூட . உனக்கு ஆறுதல் கூறவும் என்னால் இயலவில்லை . அதுவரை உனக்கு குழந்தை ஏதும் பிறக்காமல் போனதும் நல்லதே. இல்லை சீதா , அவர் என்னுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார். நல்ல மனிதர் இல்லை . அவருக்கு ஏற்கனவே வேறொரு
பெண்ணிடம் பழக்கம் இருந்ததை மறைத்துவிட்டார் . என்னிடம் மிரட்டி விவாகரத்து பாத்திரங்களில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார் . எனக்கும் அவரிடம் வாழ பிடிக்கவில்லை . பெற்றோருக்கும் மனம் வெறுத்து என்னை கையெழுத்திட கூறிவிட்டதால் நான் மறுக்கவில்லை .

திருமணத்திற்கு முன்னால் நான் நல்ல வேலைக்கு சென்று கொண்டிருந்தேன் . அவரின் வற்புறுத்தலின் பெயரால் அந்த வேலையையும் விட்டுவிட்டேன் . வேறுவழியின்றி எனது தந்தையை நானே அருகில் இருந்து கவனிக்க விரும்பியதால் , வீட்டு வேலைகள் ஏதோ அருகில் கிடைத்தது . அந்த வேலை நேரம் தவிர மற்ற காலங்களில் நான் அப்பாவை கவனித்து வருகிறேன் . அவரை குணப்படுத்தும் அளவிற்கு என்னிடம் வசதியும் இல்லை . அவளின் நிலையை கேட்டதும் , சீதாவின் கண்கள் குளமாயின . மெளனமாக சிறிது நேரம் யோசித்தாள் ...பின்பு தினேஷிடம் சென்று
ஏதோ பேசிவிட்டு வந்தாள் .

வாணி , நீ எதற்கும் கவலைப்படாதே , நான் உதவுகிறேன் . நீ மறுபடியும் வேலைக்கு செல்ல வேண்டும் . உனக்கு அறிவும் வயதும் இருக்கிறது . உனது அப்பாவை எனக்குத் தெரிந்த ஒரு முதியோர்
இல்லம் உள்ளது. மொத்தம் பத்து பேர்தான் அங்கு. நன்றாக கவனிப்பார்கள் . அதை நடத்துபவர் எனது உறவினர் தான் . நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று பயந்து விடாதே . எனது கணவர் மூலமாக ஒரு நல்ல வேலைக்கு உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் . நீயும் அடிக்கடி அந்த இல்லம் சென்று உனது அப்பாவை அருகில் இருந்து பார்க்கலாம் . விடுமுறை நாட்களில் அங்கேயே இருக்கலாம் . மருந்து செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் . கவலைப்படாதே . உடனே வாணி , சீதாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டே நன்றி கூறினாள் .


அவர்கள் திட்டப்படி , வாணிக்கும் நல்ல கிடைத்தது மாதம் இருபதாயிரம் சம்பளம் . அவள் சாப்டவேர் துறையில் பணி புரிந்த அன்பவத்தால் இந்த வேலை கிடைப்பது எளிதாக இருந்தது. அதன்பிறகு வாணி ஒரு பெண்கள் விடுதியில் சேர்ந்து அங்கே தங்கி விட்டாள் மாத வாடகைக்கு ...
மேலும் அடிக்கடி வாணியும் அப்பாவை கண்டு அவருடன் அதிக நேரம் கழித்தாள் . ஒருமாதம்
எல்லாமே நல்லபடியாக போனதில் அனைவருக்கும் முழுதிருப்தி .

ஒருநாள் வாணியின் அப்பா , சீதாவை வரவழைத்து அன்புடன் ஒரு வேண்டுகோள் வைத்தார். இங்கே பாரும்மா , சீதா ., நான் வாழப்போவது இன்னும் மிகவும் சொற்ப காலமே . இத்தனை உதவிகள் செய்து என் மகளிற்கு வாழ்வளித்த நீதான் , அவளுக்கு எப்படியாவது ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் . அப்போதுதான் நான் நிம்மதியாக கண்களை மூடுவேன் என்றார். அவளும் சரி என்று வாக்களித்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள் .

அன்று இரவு தினேஷும் , சீதாவும் வெகுநேரம் வாணியைப்பற்றி அலச ஆரம்பித்தார்கள் . அப்போது தினேஷ் அவனது அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த ஒரு ஆபிசர் , மதுரையிலிருந்து வந்து சேர்ந்துள்ளார் . நன்கு படித்தவன் , எந்த பழக்கமும் இல்லாதவன் . எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது பெண் தேடும் படத்தில் இருக்கிறான் . அவன் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பகுத்தறிவாதி . நல்ல குணம் கொண்டவன் . அவனிடமே வாணியை பற்றி கூறுகிறேன் . சம்மத்தித்தால் இருவருக்கும் நல்லது என்றான் ,. இருவரும் அனைத்தும் முடிந்ததாக எண்ணி மகிழ்ந்து தூங்கிவிட்டனர்.

மறுநாள் காலை முதல் வேலையாக தினேஷ் , என்னப்பா மணிகண்டன் ஒருவழியாக சென்னையிலும் வேலையிலும் செட்டில் ஆகி விட்டாயா என்றார் . மணிகண்டன் உடனே சார் , எல்லாவற்றிற்கும் நீங்கள் தானே காரணம் . சந்தோஷமாக இருக்கிறேன் சார் என்றான் . அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா , இது எனது
கடமை , நீயோ ஊருக்கு புதுசு , நல்ல புத்திசாலியான பையன் . உனக்கு உதவியதில் எனக்கும் மகிழ்சசியே . என்ன ...இன்னும் ஒரு வேலை பாக்கியுள்ளது உனக்கு செய்ய வேண்டியது என்று கூறி ஒரு பொடி வைத்து பேசினார் .

அவனொன்றும் புரியாமல் அருகே வந்து என்ன சார் என்று ஆர்வமாக கேட்டான் . ஒன்றுமில்லை மணிகண்டன் , ஒரு நல்ல பெண்னைப் பார்த்து உனக்கு திருமணம் செய்து வைத்தால் உனது வாழ்வை முழுமையாக தொடங்கலாம் என்றான் சிரித்தபடி . உனது எண்ணம் என்ன மணி ? நீ வேறு ஏதாவது ஒரு பெண்ணை பார்த்து இருக்கிறாயா ? என்றதும் உடனே சார் அதுமாதிரி எல்லாம் இல்லை சார். எனக்கு பெற்றோர் இல்லை . பெரியப்பா மட்டும்தான் இருக்கிறார், அவரைத்தான் கேட்கனும் என்றான் . அட அவ்வளவுதானே ...உங்கள் பெரியப்பாவிடம் போனை போட்டுக்கொடு . நானே பேசுகிறேன் .

உடனே மணிகண்டன் , சார் நீங்கள் கூறுவதை பார்த்தால் எனக்கு யாரோ ஒருவரை பார்த்து வைத்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது . உடனே தினேஷ் , மணிகண்டனை அழைத்து அருகில் உள்ள ஒரு தேநீர் விடுதிக்கு அழைத்து சென்று வாணி பற்றிய மொத்த கதையும் கூறினான். சிறிதுநேரம் இருவருக்கும் இடையே சிறிது நேரம் அமைதி நிலவியது . அவன் உடனே எழுந்து சென்று அவனது பெரியப்பாவிடம்
முழுவதையும் தெரிவித்தான் . சிறிது விவாதத்திற்கு பிறகு அவனது பெரியப்பா பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்பதை மணியின் முகத்தில் கண்ட மலர்ந்த சிரிப்பே அறிவித்தது . அவன் தினேஷிடம் இதை கூறிவிட்டு நான் பெண்ணைப் பார்த்து சிலமணித்துளிகள் தனியாக பேச வேண்டும் என்றான் . அவ்வளவுதானே இன்று மாலையே அதற்கு எனது வீட்டில் ஏற்பாடு செய்கிறேன் , சம்மதமா என்றான் . இறுதியில் அன்று மாலை 6 மணிக்கு தினேஷ் வீட்டில் மணிகண்டனும் , வாணியும் சந்திக்க ஏற்பாடு நடந்தது . வாணியும் மணிகண்டனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்தவுடன் தனியாக ஒரு மணிநேரம் சந்திக்க வேண்டும் என்று ஒருசேர கூறினார்கள் .

அதன்படி அந்த வீட்டு மாடியில் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் மனம்விட்டு பேசினார்கள் . பின்பு கீழே இறங்கி வந்தார்கள் , இருவரும் கைக்கோர்த்தபடி சிரித்துக் கொண்டே. உடனே சீதா சிரித்துக்கொண்டே கூறினாள் , ஒருவழியாய் திருமணமே முடிந்து விட்டது என்று ,. அனைவரும் ஆமோதிப்பதை பல கைத்தட்டி சிரித்தார்கள் . பிறகு முதலில் அந்த முதியோர் இல்லம் சென்று வாணி தனது அப்பாவிடம் மணிகண்டனை அறிமுகப்படுத்தி விட்டு நடந்து முடிந்தவற்றை விடாமல் கூறினாள் . அவர் மகிழ்சசியுடன் இருவரையும் வாழ்த்தினர். அதன் பிறகு இருவரும் மணியின் பெரியப்பாவின் வீட்டிற்கு சென்று வாணியை அறிமுகம் செய்துவிட்டு மற்ற நிகழ்வுகளை அனைத்தையும் கூறினார்கள் . அவரும் ஆனந்தப் பெருக்குடன் அவர்களை வாழ்த்தினார்கள் .

பிறகு சீதா அடுத்த வாரத்தில் ஒரு நாள் பார்த்து , அவளின் வீட்டு மொட்டை மாடியிலேயே 20 பேர் மட்டும் வைத்து திருமணம் நடக்கும் என்று அறிவித்து , அதன்படியே அனைத்தும் நிறைவேறியது ஒரு குறையும் இன்றி . மணிகண்டன் அப்பா மங்கல நாணை எடுத்து கொடுக்க அதை வாணியின் அப்பா தொட்டு ஆசரிவாதித்து , பிறகு திருமண வைபோகம் சிறப்பாக நடந்தேறியது . அதுமட்டுமல்ல , மணிகண்டன் உறுதியாக வாணியிடம் . உங்கள் அப்பா நாம் வாழப்போகிற வீட்டில் தான் ஒன்றாக இருக்கப்போகிறார் . நீ விரும்பினால் வேலைக்குப் போகலாம் அல்லது வீட்டில் இருந்தபடியே அவரை கவனித்து கொள்ளலாம் என்றார் .

மகிழ்ச்சியில் வாணிக்கு ஒன்றுமே புரியவில்லை இப்படியும் எனது வாழ்வில் நடக்குமா என்றுநினைக்கவே இல்லை என்று சீதாவையும் அவரது கணவன் கரங்களையும் பற்றி கண்ணீர் துளிகளுடன் நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள் .

அனைவரின் முகத்தில் மகிழ்ச்சியோடு , வாங்க எல்லோரு சேர்ந்து சாப்பிடலாம் என்று யாரோ கூற ,
ஒவொருவராக அமர ஆரம்பித்தார்கள் .

வாழ்க மணமக்கள் ! வாழ்க சீதா ,தினேஷ் !

உள்ளவரை அடுத்தவருக்கு இயன்றவரை உதவுதல் என்பதைவிட , நமக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும் வாழ்க்கையில் ?


பழனி குமார்
16.08.2020

எழுதியவர் : பழனி குமார் (17-Aug-20, 3:14 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 83

மேலே