கனவுக்கு காதலன்

சியாமளாவின் கோபம் தனியவே இல்லை; எப்படி மனம் வந்தது இந்த மனோ என்ற மனோகருக்கு?
அவனுக்கு என்ன பெரிய கிருஷ்ண ன்னு நினைப்பா? எல்லா ஊரிலும் ஒரு காதலி வேண்டுமாமா ? தனது நெருங்கிய தோழி தனுஜாவு க்காக தான் இத்தனை கோபம்; பாத்திரங்களை போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள் சமயலறையில்;
ஞாயிற்றுக் கிழமை இத்தனை சீக்கிரம் சமயலறையில் என்ன சப்தம் என்று கோபாலன் தன் மனைவியை தேடி பெட் ரூம் விட்டு வெளியில் வந்தான்; அவளுடன் பேச்சு கொடுத்தான்;
"என்னடா ,ஷியாம் இன்னைக்கு லீவுல கூட இத்தனை சீக்கிரம் எழுந்துட்ட? உடம்பு முடியலையா ? செல்லத்துக்கு தூக்கம் வரலியா? என்ன ஆச்சு ? "
"இன்னும் என்ன ஆகணும்? ஆம்பளைங்கள நம்பவே முடியல ; யாரு யாரு எப்ப எப்ப எப்படி இருப்பாங்க ? எதை எதை மறைக்கிறாங்கன்னு தெரியல " என்று பொறிந்து தள்ளினாள்;
(கோபாலனுக்கு வார்த்தை வரவில்லை; இவளுக்கு தெரியாமல் அன்று ஆபீசில் தண்ணி அடித்தேன்; அத சொல்றாளோ? அப்பப்போ தம் அடிக்கிறதை சொல்றாளோ? பையன் சதீஷுக்கு இவளுக்கு தெரியாமல் ஐஸ் கிரீம் வாங்கி தந்ததை சொல்கிறாளா ? எதை கண்டுபிடித்தாள்? யோசித்து யோசித்து தான் மாட்டிக்கொள்ளாமல் பேசுவதை பற்றி யோசித்தான்; )
இவனின் திடீர் அமைதியை கண்டு அவனை குறுகுறுவென பார்த்தாள் சியாமளா;
தொண்டையை கனைத்த வாரு சமாளித்தான்; என்னமா; இப்படி பார்க்கிற ? நான் எதையும் மறைக்கலையே; நீ சொல்றத பார்த்தா எல்லா ஆம்பளைங்களும் மறைக்கிறாங்கன்னா ... எதையும் மறைக்காமல் இருப்பவன் ஆம்பளை இல்லையா ? என ஜோக் அடித்து சிரிக்க வைக்க முயன்றான்; "கோபால்;
(அவள் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தாள்;
சியாமளாவின் முக பாவனைகளில் விஷயம் சீரியஸ் என்பதை உணர்ந்து )
"என்னமா என்ன பிரச்னை?" கோபால்;
"என் பிரண்ட் தனுஜா வோட பாய் பிரின்ட் அந்த கடன்காரன் மனோகர் தான் இப்போ பிரச்னை", சியாமளா;
"அவங்களுக்கு என்ன பிரச்னை? இன்னும் 2 மாதத்தில் திருமணம் என்று சொன்னியே "; தனுஜாவுக்கும் அவருக்கும் பிரேக் அப் ஆ? ", கிண்டலாய் சிரித்தான் கோபால்;
" மற்றவங்க வலி உங்களுக்கு சிரிப்பா ", கோபப்பட்டாள் சியாமளா ;
"சரி டி; சாரி , லீவு நாளு அதுவுமா பொண்டாட்டி மூட் அவுட் ல இருக்காளே ; சரி பண்ணலாம்னு யோசித்தேன்; அதான் என்ற அப்பாவியான கோபாலை பார்த்து ரசித்து கொஞ்சமாய் சிரித்தாள்;
"அப்பா , சிரிச்சிட்டே; இப்போ சொல்லு ; அவங்களுக்குள்ள என்ன பிரச்னை ? ", கோபால்;

" சொல்லவே கஷ்டமாயிருக்கு பா; ரெண்டு வருஷம் நல்லா பழகிட்டான்; அன்பா தான் இருந்தான்; அதனால தான் கல்யாணம் முடிவுக்கே வந்தாங்க; நாலு நாள் முன்னாடி தான் தனுஜா சொன்னாள்; அந்த மனோகருக்கு கிராமத்துல ஏற்கனவே மேரேஜ் ஆகி ஒரு குழந்தை கூட இருக்காம் " சியாமளா.
"எப்படி தெரிஞ்சது? ரொம்ப பெரிய ஏமாற்றம் தான்; ஆள பார்த்தா ரொம்ப சாப்ட் ஆக நல்லவன் மாதிரி இருக்கான்; தனுஜா வேற ரொம்ப நல்ல பொண்ணு; ரிசெர்வ்ட் டைப்; அவள் எப்படி இந்த பிரச்னையை டீல் பண்ணப்போறா ?";கோபால்;
"எனக்கும் அதான் கவலை; இவ நல்ல நேரம் போன திங்கட்கிழமை மனோகர் ஊருல இருந்து யாரோ அவனை பார்க்க வந்திருக்காங்க; ஏன்டா ஊருக்கு அடிக்கடி வர்ரதில்லை; உன் குழந்தை ஏங்குதுன்னு ஏதோ பேச இவன் எதை எதையோ சொல்லி சமாளிக்க அந்த நேரத்துக்கு அங்க எங்க டீம் மேட் விஜய் கேட்டுட்டு தனுஜா கிட்ட சொல்லிட்டான்; அவள் நேரா என்கிட்டே வந்து சொல்ல, நானும் அவளும் மனோகர் கிட்ட பேசினோம்; முதல்ல மறுத்தவன், உண்மை தெரிஞ்சதை புரிஞ்சிகிட்டு சதி லீலாவதி மாதிரி கதை சொல்றான்; தனுஜா வை ரெண்டு நாளா கன்வின்ஸ் பண்றதுல தான் இருக்கான்; ", சியாமளா;
"இப்போ நீங்க என்ன முடிவு எடுக்க போறீங்க ? அதாவது தனுஜா சார்பாக ...?", கோபால்;
" தனுஜா வை இன்று 12 மணிக்கு இங்கு வர சொல்லி இருக்கேன்; நம்ம சதீஷ் குட்டிய மட்டும் எங்க அம்மா வீட்டில் விட்டுட்டு வாங்களேன், ப்ளீஸ்", சியாமளா;
"மேடம் , சொன்னா சரி; அப்புறம் எனி ஹெல்ப் உன் பிரென்ட் க்கு ?", என கண் சிமிட்டினான்;
சியாமளா ," அதை நான் பார்த்துக்கிறேன்; இப்போ சதீஸ் குட்டி ய கவனியுங்கள்;"
(நேரம் பனிரெண்டரை யை நெருங்கி விட்டது; ஏன்? இன்னும் தனுஜா வரவில்லை; வாசலுக்கும் ரூமுக்கும் நடையாய் நடக்கும் சியாமளவிடம் கோபால் பேச்சு கொடுத்தான்)
கோபால்," என்ன சியாம், நேரமாச்சேன்னு பார்க்கிறியா ? டிராபிக் ஆக இருக்கும்; வந்திடுவாள்;"
சியாமளா,"நேற்று மாலை அவள் மனநிலை பார்த்து என்னுடன் வீட்டுக்கு வர சொன்னேன்; இல்ல நான் பார்த்துகிறேன்னு போனாள்; போன் வேற ஸ்விச் ஆப் காட்டுது; அதான் பயமாக இருக்கு; "
கோபால்," இரும்மா; மத்தவங்களுக்கு உதவறது நல்லது; அதுக்காக நம்ம உடம்பை கெடுத்துக்க கூடாது சரியா? ";
சியாமளா," நம்ம கல்யாணத்துக்கு முன்னமே அவள் என்னோட பெஸ்ட் பிரென்ட்; நம்ம போல அவளுக்கும் நல்ல வாழ்கை அமையனும் எனக்கு தோணாதா? ";
கோபால்," ஒன்னு சொல்லவா ? அவரவர் கர்மா வை அவரவர் கழிக்கணும்; அதை தான் விதி ன்னு சொல்றாங்க; தெய்வ நம்பிக்கை யோடு இருந்தால் நிச்சயம் கர்மாவை நல்லபடி கழிக்கலாம்; "
(பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் தனுஜா; )
சியாமளா," வாடி; ஏன் லேட்? போனை வேற ஆப் பண்ணி வச்சிருக்க; "
தனுஜா, " மனோகர் கால் பண்ணி சொன்னதே சொல்லிட்டு இருக்கான்; அதான் போனை ஆஃப் பண்ணிட்டேன்; "
சியாமளா," அவளது அழுத முகத்தை பார்த்து .. நல்லா தூங்கினியா ?";
தனுஜா," ம் ம் அதெல்லாம் நல்லாத்தான் தூங்கினேன்;
சிய்மால," சரி சொல்லு; என்ன சொல்றான் அந்த மனோகர் பாவி ?"
தனுஜா," நம்ம கல்யாணத்தை நிறுத்த வேணாம்; என் மனைவியோட வாழ விருப்பமில்லை; நான் உன்னிடம் வந்திடறேன்; நிச்சயம் உன்னை நல்லா பார்த்துக்குவேன் ; அப்படி இப்படின்னு ..";
( அவர்களுக்கு காபி கலந்து கொண்டு வந்தான் கோபால் ; இருவரும் பார்வையால் நன்றி கூறி பருகினார்கள் )
கோபால்," சரி நீங்க பேசுங்க , நான் என் ரூம்ல இருக்கேன்";
தனுஜா," நீங்களும் இருங்க சார், எனக்கு இப்போ தெளிவான சிந்தனையோடு இந்த பிரச்னை யை வெளியில் இருந்து அணுகும் மனிதர்களுடன் தான் பேசணும்; "
கோபால்," சியாமளா சொன்னா; உங்க பிரச்னையை நீங்க எப்படி பார்க்கறீங்க ?
தனுஜா, " ஒரேயடியாக இன்னமும் உணர்ச்சி வசப்பட்டு அழுதுட்டு நிற்கிற வயது இல்லை; அதே நேரம், நமக்கு நல்லதை விட்டு கொடுக்கிற ஆர்வமும் இல்லை;"
கோபால்," புரியல, நீங்க என்ன சொல்ல வரீங்க? ";
தனுஜா," புரியும் படி சொல்றேன்; நான் வீட்டுக்குள் வரும் போது அவரவர் கர்ம பலன்னு சியாமளா கிட்ட சொல்லிட்டு இருந்தீங்களே ? அதை புரியும் படி சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் ";
கோபால்," இல்லமா, நான் சும்மா ஏதேதோ சொன்னது... என்று இழுத்தான் ";
தனுஜா," நான் தப்பா நினைக்க மாட்டேன்; சில தப்புகளை மாற்றி கொள்ள தான் கேட்கிறேன்; சொல்லுங்க";
கோபால் சியாமளாவை பார்த்தான் ; அவளும் தலை அசைக்க சொல்ல ஆரம்பித்தான்;
கோபால்,"கர்மா என்பது செயல்; நாம் செய்திடும் செயல்களுக்கான பலன்களை நாம் அனுபவிக்க வேண்டும்; நாம் எதை செய்கிறோமோ அது தான் நமக்கே வந்து சேரும்;"
நம் ஆன்மீகமும் நமக்கு இதை தான் சொல்கிறது;நல்லதை செய்திடுங்கள் ; நல்லதாய் சிந்தியுங்கள்; ஏனெனில் இந்த உலகில் நமக்கான எதையும் நாம் தான் விதைக்கிறோம்; நாம் நம் எண்ணங்களால் விதைப்பது பிரபஞ்சத்தில் பதிவாகிறது; கர்ம வினை என்பதுவும் அது தான்; நீ எதை உனது கர்மாவாக (செயலாக) நினைக்கிறாயோ அதன் செயல்களால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நீ தான் பொறுப்பு; அவைகள் உனையே சேறும்; அதை அனுபவித்தே ஆக வேண்டும்”;
கர்ம வினை என்பதுவும் அது தான்; நீ எதை உனது கர்மாவாக (செயலாக ) நினைக்கிறாயோ அதன் செயல்களால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நீ தான் பொறுப்பு; அவைகள் உனையே சேறும்; அதை அனுபவித்தே ஆக வேண்டும்;”

தனுஜா, " அப்போ நேற்றைய கர்மாவை இன்றைய கர்மாவால் நான் மாற்ற முடியுமா ? ";

கோபால்," நிச்சயம் முடியும்; நேற்றய தவறுகளை இன்று திருத்தி கொள்ள கொடுக்கும் மற்றுமொரு வாய்ப்பு தான் இன்றைய வாழ்க்கை;"
( கணவனின் பேச்சுக்களை கேட்டு சியாமளவுக்கோ அதிசயமாக இருந்தது; இந்த மனிதருக்கு இத்தனை தெரியுமா ? என்று; கோபால் அவளின் முகத்தை பார்த்து புரிந்து கொண்டு மேலும் தொடர்ந்தான்)
பாரதியாரின் இன்று புதியதாய் பிறந்தோம் என்ற வரிகளும் அதை தான் சொல்கிறது; "
(பெண்கள் இருவரும் கேட்டுக்கொண்டிருக்க கோபால் பேச்சை தொடர்ந்தான்) உலகின் அனைத்து உயிர்களுக்கும் இல்லாத ஒரு பேராற்றல் நினைவாற்றல்; இறைவன், தன்னை நினைப்பதற்கும் தன்னை அடைவதற்கும் பெரியோர்கள் சொன்ன நெறிமுறைகளை மறவாதிருக்க அளித்த நற்கொடை இந்த நினைவாற்றல்; அதே நினைவுகள் தங்கி மனிதனின் வாழ்வை அழித்துவிடாதிருக்க மறதி எனும் மாமருந்தையும் நமக்கு கொடுத்திருக்கிறார்; எதை நினைப்பது ? எதை மறப்பது என்பதையும் நம் கைகளில் தான் கொடுத்துள்ளார்;
வேறு எந்த உயிரியும் பிற உயிர்களிடத்தில் குறை காணாது; பிற உயிர்களை ஏமாற்றாது; அதனதன் வாழ்க்கையை வாழும்; பிறர் பொருள்களின் மேல் பற்று வைக்காது;
அதனால் மனிதனும் தனது நேற்றைய தவறான கர்ம வினைகளை இன்று மாற்ற முடியும்"; என்று சொல்லி முடித்தான்;
தனுஜா," சூப்பர்ப் அண்ணா; கோபால் அண்ணா உங்க விளக்கம் ரொம்ப சரி; எனக்கு என் முடிவுகளுக்கு அர்த்தம் கொடுக்கிறது; "
சியாமளா," என்னடி தனு.. என்ன சொல்ற ? என்ன முடிவு ?";
தனுஜா, " ஆமாம் ; சியாமளா.. நான் மனோகரை விட்டு விலகிக்கறேன்; தெரியாமல் செய்த ஒரு தப்புக்கு என் வாழ்க்கை முழுதும் தெரிந்தே இன்னொரு தப்பு செய்து என்னைப்போன்ற மற்றுமொரு பெண்ணுக்கு தண்டனை கொடுக்க மாட்டேன்; இது தான் என் முடிவு; "
சியாமளா, " தனு, உன்னால முடியுமா ? அவனை எத்தனை விரும்பினேன்னு எனக்கு தெரியும் என்று தனது கண்களில் வரும் நீரை துடைத்துக்கொண்டாள்; "
தனுஜா," கண்ணீருடன் சிரித்தாள்; சியாமளா, எதார்த்தம் னு ஒன்னு இருக்கு இல்லையா ? காதலன் பொய் யாக மாறுகிற போது அவன் மீது வைத்த அன்பு மட்டும் நிஜமாகுமா ? கானல்நீர் தேடும் மானாக பொய் தேடி எனது வாழ்க்கையை தொலைக்க முடியாது இல்லையா ? ";
அதுக்காக இப்படியே இருந்துவிடவும் மாட்டேன்; நீ கவலை படாதே; நிச்சயம் ஒரு தோல்வியில் தொலைந்து போகமாட்டேன்; நான் தப்பு செய்யலையே; ஏமாந்துட்டேன்; நல்லவேளை, எங்க காதல் உறவு இன்றைய தலை முறை போல எல்லை மீறாமல் தப்புகள் செய்திடாமல் கண்ணியமான காதலர்களாக வாழ்ந்தது இன்று எனக்கு உதவுகிறது ;"
சியாமளா, " உன்னால் மறக்க முடியுமா ?"
தனுஜா," கொஞ்ச காலம் கஷ்டமாக இருக்கும்; என்ன செய்வது ? தாங்கி தான் ஆகணும் ; எத்தனையோ பேர் கனவுல காதல் பண்ணலயா ? அதைப்போல கனவுக் காதல் என்று நினைத்துக் கொள்கிறேன் என , கண் சிமிட்டி சிரித்தாள் ;"

கோபால், " தனுஜா, உங்க கஷ்டத்துலயும் இன்னொரு பெண் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிற உங்க மனதுக்கு ஒரு சல்யூட் "; இந்த நல்ல மனம் போதும் எப்போதும் உங்க கர்ம பலன் நல்லதாகவே இருக்கும்; "
சியாமளா, "கோபால், இனி உங்க கிட்ட நிறைய கற்றுக்கொள்ளனும் ; பெரிய குரு நீங்க ";
கோபால், " அப்படியே ஆகட்டும்; என் பக்தயே ; சியாமளா ,இனியேனும் உனது அறிவுக்கண் திறக்கட்டும்;" என்றதும் சியாமளா முறைக்க தனுஜா சிரிக்க….
இன்னும் என்ன ? சுபம்; வாங்க நாம போகலாம் - நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும்; ஏன்னா தனக்கு கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் நல்லதை மட்டுமே நினைப்பார்கள்; அவர்கள் கர்மா எப்போதும் அவர்களை நல்லபடி காக்கும்;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (18-Aug-20, 12:24 am)
சேர்த்தது : Samyuktha
Tanglish : kanavukku kaadhalan
பார்வை : 594

மேலே