கொஞ்சம் கொடுக்கவும் பழகுவோம்

ரசிப்பை விரும்பும் நாம்
இயற்கையை ரசிக்க மறக்கிறோம்
வெற்றியை விரும்பும் நாம்
தோல்வியை ஏற்க மறுக்கிறோம்
அமைதியை விரும்பும் நாம்
அரவணைத்து செல்ல மறக்கிறோம்
மகிழ்ச்சியை விரும்பும் நாம்
பிறரை மகிழ்விக்க மறுக்கிறோம்
பாராட்டை விரும்பும் நாம்
மனந்திறந்து புகழ மறக்கிறோம்
புரிதல் இல்லையென புலம்பும் நாம்
பிறரைப் புரிந்துக்கொள்ள மறுக்கிறோம்
மற்றவர்கள்
நமக்கு கொடுக்க விரும்புவதை
நாமும் கொடுத்திடுவது தானே மாண்பு
கொடுக்காமல் பெற்றிடுவதில் இல்லை உண்மையான மகிழ்வு

#சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (17-Aug-20, 8:13 pm)
பார்வை : 85

மேலே