கண்மணியே பேசு
கெஞ்சலாய்,
கொஞ்சலாய்,
சிணுங்கலாய்,
சீண்டலாய்,
செல்லக் கோபமாய்,
கொஞ்சம் பாவமாய்,
கண்டிப்பாய்,
கொஞ்சம் மன்னிப்பாய்,
இரவும் பகலும்
இனிமையாய்,
எத்தனை வார்த்தைகள்,
அத்தனையும் செவியில்
தேன் வார்த்ததாய்,
உன் பேச்சால் தானே வாழ்ந்திருந்தேன் நான்
வாய்மூடி இருப்பதேன்
கண்மணியே பேசு,
நான் வாழவேண்டும் உன்னோடு!