வினையின் விளைவு
வினையின் விளைவு
நீர்க்குமிழி வாழ்க்கையென அனைவருக்கும் தெரியும்
தெரிந்தும் மனமேனோ
அடங்காமல் அலையும்
தவறுகளின் பிறப்பிடம்
எண்ணமென தெரியும்
தெரிந்தும் எண்ணவிடாமல்
மாயைக் கைப்பற்றும்
எல்லாம் அறிந்தும்
ஏன் இந்த சோகம்
கர்ம வினையாவும்
பின்தொடரும் சாபம்
விதைக்கும் முன்னே
ஊழ்வினைத் தொடரும் உன்பின்னே
உன் வினைக்கு நீயே பொறுப்பு
விளைவுக்கு உன் வினையே திறவு
மனிதராகப் பிறந்தது
மாபெரும் நல்வரவு
வாழ்ந்திடுவோம் அனைவரும்
தீங்கில்லா நல்வாழ்வு
#சரவிபி_ரோசிசந்திரா