பெண்ணில்லா
இவ்வுலகில் பெண் மட்டும்
இல்லாமல் போயிருப்பின்..
நீ இல்லை நானில்லை..
அவனில்லை அவளில்லை...
தாயுமில்லை சேயுமில்லை..
உடன் பிறந்தோர் உற்றோரில்லை..
உண்ண உணவு தேவையின்றி
உழைத்து வாழ உழவனில்லை..
உடுத்தவுடை ஆளில்லா உலகுக்கு
நெசவு தெரிந்த நெசவாளியில்லை..
ஆண்டவன் ஆலயம் ஏதுமின்றி
ஆத்திகன் நாத்திகன் யாருமில்லை..
நாடு எல்லை மந்திரி உலாவரும்
உறவு வசிக்கும் ஊரேதுமில்லை..
நாகரீகம் பேசும் நகரமில்லை..
பண்டிகை திருவிழா ஏதுமில்லை.
காதல் காவியம் கவிதையேதுமில்லை..
நோயில்லை நோய்போக்கும்
மருத்தவன் மனை ஏதுமில்லை..
நடிகர் நடிகை மிடுக்கி வந்த
திரை தொலைக்காட்சி ஏதுமில்லை..
பேருந்து சீருந்து விமானம் கப்பல்
வியபாரமேதும் தேவையில்லை...
தங்கமது தன் மதிப்பறியா
தகரத்தோடு தானிருந்திருக்கும்..
பள்ளி கல்லூரி பாடம் படிப்பு
வேலை திருமணம் குடும்பம்
விபத்து மரணம் உணர்ச்சி
அழுகை இருக்க வாய்ப்பில்லை..
ஆள் புழங்கா வீடு போல
இவ்வுலகம் இருந்திருக்கும்...
நீவிரின்றி அமையாது உலகு..
நான் சார்ந்த மகளிரனைவருக்கும்
என் அன்பான நன்றிகள்..
------------------------
சா. சரவணன்