நம் காதல் திருமணம்
நித்தமும் சித்தத்தில்
தித்திப்பானக் காதலியே,
நம் காதல் எனும் பேரன்பை,
நாம் காத்த பெரும்பண்பை,
மற்றவர் குறைகூறாமல்,
பெற்றவர் பெருமைப் பட,
மணம் செய்ய
மனங் கொண்டோமே,
காலம் கனிந்துவிட்டது,
கனவு பலித்துவிட்டது,
நம் மனங்களோடு
பிறர் மனங்களும் மகிழும்,
திருமணமாம் நம்
காதல் திருமணமே!!!