கோமதி

ஊனோடும்
உயிரோடும்
உறைந்து
கறைந்து
நூற்றாண்டு
நோன்பிருந்து
பெற்ற முத்தே...!

என்ன
பிடித்துவிட்ட
காதல் பித்தே...!

வாழ்வினை
சிறப்பிப்போம்
ஒத்தே...!

வழிவிட்டு
ஒதுங்கடி
அத்தே...!

நீ
இன்றுவரை
கண்ட ஆண்டுகள்
இரு பத்து;
அதில் வென்ற
ஆண்டுகள்
ஒரு பத்து...!

உன்னால்
காதலும்
கவிதையும்
நான்
ஈட்டிய சொத்து..!

உன்
பெயரின்
முதல் எழுத்து கோ...!

உன்னை
எழுதி எழுதி
ஆனேன் கவி "கோ"...!

நீ
பிறந்ததால் உயர்ந்தது
அழகு பூமிக்கோ...!


நீ
சூடியதால் மணம்
மணக்குது மல்லிக்கோ...!

அவள்
பெயரின்
முடிவு மதி...!

இவளை கண்டு
இரவில் ஒழிந்து
ஒளிர்கின்றது
வான்"மதி"...!

அவள் பார்வைக்கு
தரமுடியுமோ வெகு"மதி"...!

அவள்
அழகு "மதி"
அறிவு "மதி"
உயரத்தில்
குல்ல "மதி"
நிறத்தில்
கருத்த "மதி"
அவளே என் கோ"மதி"....!

கோ = மேன்மை
மதி = நிலா , அழகு , அறிவு
(அழகு அறிவை பெற்ற மேன்மை பொருந்திய நிலா)

வீரமணி கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:29 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 370

மேலே