முகநூல் பதிவு 78

17 .8 .2019

என் பேரன்பு பிரிய நட்புகளுக்கு....

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
ஆதி உதயநாள் முதல் என் ஆகமவிதி இதுதான்.....
அதனால் ஆலயம் செல்லும் வழக்கம் மிகக் குறைவு....
அதுவும் பிறந்தநாள் திருமணநாள் என்று நல்ல நாட்களில் ஆலயம் சென்றதே இல்லை.....
காலை அம்மா அப்பா கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதோடு சரி...
அனைத்தும் பெற்றுவிட்ட ஆனந்தம் கிட்டும்....
2011 அம்மா அப்பா மறைவிற்குப் பின் அண்ணன் காலடிதான் ..... விழியோரம் கசியும் கண்ணீரோடு அவன் ஆசிர்வதிப்பான்....
ஆயிர ஜென்ம தொடர்பு இது....
அளப்பரிய ஆத்ம திருப்தியை தந்திடும்.....

ஆனால் நேற்றுதான் என் வாழ்நாளில் ...
அதுவும் என் பிறந்தநாளன்று
ஆலய தரிசனம் ...திருவேற்காடு சென்று வந்தேன்....
நிறைவான மனம் குளிர்ந்த தரிசனம் கிட்டியது.....
சாமி பெயரிலேயே அர்ச்சனை.... “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பதை உணர்த்தியது....

என்னைவிட மகிழ்வாய் என் அன்பு முகநூல் உறவுகள் என் பிறந்தநாளை மிக சிறப்பாக்கி நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்கள்
“நேர்பட ஒழுகு “என்பதின் பயனை மிக நன்றாக உண்ர்ந்தேன்.....
ஆயிரம் ஆயிரம் உடன்பிறவா சகோதர சகோதரிகள் வாழ்த்துக்கள் ...
நன்றி என்ற மூன்றெழுத்தில் இந்த உறவு முடிவதில்லை.....
என் ஆயுள் உள்ளவரை தொடர வேண்டும் இந்த அன்பு அலை....!
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

எழுதியவர் : வை.அமுதா (18-Aug-20, 7:28 pm)
பார்வை : 35

மேலே