எல்லோருக்கும் பொதுவே மரணம்

காலைக்கதிரவனின் கதிர்மிகு ஒளியில் உங்கள் காயங்கள் கழுவப்படட்டும்
சாயம் ஏற்றப்படாத வண்ண மலர்களின் வாசங்களை திருடிச்செல்லும்
தென்றல் உங்களின் இன்றய பொழுதை புனிதமாக்கட்டும்
மரங்கள் உதிர்க்கும் சருகுகளாய்
உங்கள் துயரங்கள் இதயத்தினின்று இறங்கிப் போகட்டும்
இப்பிரபஞ்சம் உங்கள் புதிய பிறப்புக்காய்
காத்து நிற்பதை காணுங்கள்
தினம் தினம் புதிதாய் பிறப்பெடுங்கள்
கடந்தகாலச்சுவடுகளை எடுத்து எதிர்கால புட்டிக்குள் போட முயலாதீர்கள்
அங்கே உங்களை அறியாமலே உங்கள் நிகழ்காலத்தை தொலைத்துக்கொண்டிருகிறீர்கள்
ஞானம் புத்தனுக்கு மட்டும் சொந்தமானதல்ல அது எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குள்ளும் நடக்கலாம்
எல்லோரும் மரணத்தின் வாயிலில் நுழைய வரிசையில் நிற்பவர்கள்தான்
ஒருவர் சற்று முன்னாடி மற்றொருவர் சற்று பின்னாடி
முன்னால் நிற்பவரை பார்த்து சிரிப்பதும்
பின்னால் நிற்பவரை பார்த்து அழுவதும்
நியாயமல்லவே
பாதை நிரந்தரம் பயணித்தல் கட்டாயம்
புரிந்து கொள்வீர்களாயின்
உங்கள் புத்தி வேலைசெய்ய மறுக்கும்
அப்போது ஞானம் அங்கே பிறக்கும்
மரணத்திற்கு முன் உங்கள் உயிர் மண்டியிட. தயாராகும்
அப்போது
மகிழ்ச்சி உங்கள் முன் மண்டியிட தயாராகும்
இப்போது நீங்கள் இருப்பது இருத்தல் இயல்

எழுதியவர் : இளவல் (20-Aug-20, 12:15 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 85

மேலே