பாட்டாளி

பாட்டாளி!
அவனுக்கு
பசி வயிற்றில் தோண்டிய பள்ளத்தால் தானாய்
மேடானது முதுகு !

அவன்
பசித்த வயிற்றால்
மட்டுமே தணிக்க முடிகிறது
குடும்பத்தின் பசியை!

அவன் வேர்வைகளே
நீருற்றிப் போகின்றன
உழைப்பின் வேர்களுக்கு!

விடிவதும் அடைவதும் அறியாது
தனைக் கழித்துச் செல்கின்றன
அவன் பொழுதுகள்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (20-Aug-20, 4:28 pm)
Tanglish : pattaali
பார்வை : 51

மேலே