அவளுக்காக காத்திருக்கும் அவள் -- அந்திப்பொழுதில் l

மாலையில் மயக்கும் வேளையில் மல்லிகையும்
சோலையில் பூத்து குலுங்க புள்ளினமும்
அலையலையாய் வீடுநோக்கி பறந்து செல்ல
என்மனமோ திங்களும் கீழ்வானில் மெல்லவர
என்னவன் வரவிற்கு ஏங்கி நிற்க
வருவானோ அவன் என்னோடு சேரும்
நாள் எப்போது என்று கூறி செல்வானோ
கொஞ்சம் அறிந்து சொல்வாயோ என்தோழி
இன்னும் தாங்காதடி எந்தன் நெஞ்சம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Aug-20, 7:50 pm)
பார்வை : 229

மேலே