அவளை தொடர்ந்து சென்றேனே

வாளெடுத்து வீசி பல
வாழை மரத்தை சாய்த்துள்ளேன்
வம்புக்காக சீண்ட வந்த
வண்ண வண்டை கொன்றுள்ளேன்
நடக்கையிலே தடுத்த பாம்பை
கழியாலே அடித்துள்ளேன்
புளிய மரசிம்பில் தொங்கி
புல் புல் பறவையை பிடித்துள்ளேன்
களிமண்ணைக் கொண்டு பல
கலைப் பொருட்கள் செய்துள்ளேன்
உழவு கலப்பையைக் கொண்டு பல
காணி நிலத்தை உழுதுள்ளேன்
முடிந்த வரை இடரின்றி முழு
மகிழ்வாய் வாழ்ந்தவன் நான்
முழு நிலவாள் முல்லையைச் சூடி
புது பொலிவாய் என்னருகில் வந்தாள்
முடி முதல் அடி பாதம் வரையில்
அத்தனை உறுப்பும் அதிர்வால் பதற
அகிலம் மறந்து ஆண்மை மறந்து
ஆசை மிகுதியால் அவளை தொடர்ந்து சென்றேனே.
- - - - - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Aug-20, 10:07 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1630

சிறந்த கவிதைகள்

மேலே