தொடுதல் யாவகை

------------------------------
அம்மா கொடுப்பாள் கட்டி முத்தம்..
அப்பா கொடுப்பார் ஆசை முத்தம்..
அண்ணண் தருவான் நெற்றியில் முத்தம்..
அக்காள் கொடுப்பாள் அக்கறை அணைப்பு..
தம்பியவன் சீண்டுவான் சிண்டை பிடித்து..
தங்கையவள் ஏங்குவாள் என் கை பிடிக்க..
பயமேதுமில்லை இவர்கள் தொட்டால்..
இவர்கள் மனதில் இருளேதும் இல்லை..
உற்றார் உறவினர் என்னுதடு தொட்டால்
உரக்க கத்துவேன் பயமேதுமின்றி..
என் நெஞ்சை தொட்டு பேச முயன்றால்
நேராக சொல்லுவேன் கூடாது என்று..
தொடைக்கு நடுவில் யார் கை வைத்தாலும்
தொடை நடுங்க வைப்பேன் பெருங்கூச்சலிட்டு..
முகமறியா மூர்க்கன் என்னருகே வந்தால்
முந்தி ஓடுவேன் அவ்விடமிட்டு...
ரகசியம் காக்கா ராணியும் நானே
பார்த்தவை பகிர்வேன் பெற்றவரிடத்தில்..
நானும் அறிவேன் தொடுபவர் உறவு..
நானும் அறிவேன் தொடுபவர் மனது..
நானும் அறிவேன் தொடுபவர் நோக்கம்..
என்னுடம்பு மட்டும் எனக்கே சொந்தம்..
என்னை தொடாதீர் என்னனுமதியின்றி..
எனக்கு தெரியும் தொடுதல் யாவகை..
---------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (20-Aug-20, 11:13 pm)
பார்வை : 993

மேலே