பச்சிலை பழுது
-------
பழுதான வாகனத்தின் பின் புறவுடம்பில்
பச்சிலை கிளையை பெரிதாய் செருகி
பழுது வாகனமிதுவென்று பறை சொல்லும்
முறையை அறிமுகம் செய்தறிவாளி யாரோ ..
பச்சை நிறம் குறிக்கும் ஆரம்ப செயலை
பச்சை அர்த்தமிங்கு சிவப்பாகி போனதோ..
ஓடாத வண்டியது புகை தர மறந்ததால்
பசுமை காத்திட பச்சிலை உணர்த்தியதோ..
பச்சிலை தோரணம் முன்னுடம்பில் இருந்தால்
வண்டியது ஆர்ப்பரிக்கும் ஆயுத பூசைக்கு..
இங்கு பச்சிலை கிளையை பின்னுடம்பில் சுமந்து
கடக்கும் வண்டிக்கெல்லாம் நோயாளி போலானதோ..
----------
சாம். சரவணன்