பாதசாரி

நடந்ததை மறக்க நடந்தேன் துக்கம் தூரப்போக
தூக்கம் தேடிவர - சோர்வடய - சோறுண்ணாமல்,
ஒரே பாதையில் நடந்தால் ஒரே மாதிரி இருகுமென்று வேறு பாதையில்
நடக்க பழகினேன் - கால்களை
நடப்பதை தவிர எதயுமே உணரமுடியவில்லை
மீண்டும் ஒரே பாதையில் நடந்தேன் நடப்பது மறந்து கண்களுக்கு விருந்தான
நிலவு - அதை அப்பப்போ மூடி மறைக்கும் மேகம்
அசைந்தாடும் தாவரம் வரமாய் வந்த காற்று
வியர்வயாய் வந்த வெப்பம் - அதை மண்ணில் விலாமல் சிதறடித்த தென்றெல்
கண்டதை படம் பிடித்தவன் கண்ணுக்கு பிடித்ததை எடுத்தேன் – என் புகைப்படம் – தெருவோரப்புகைப்படம்
தூக்கியெறிந்த பொருட்களின் அழகு
தூங்காமல் அலயும் பூனை
அந்நாந்து பார்க்கும்படி எழுந்த்து நிற்க்கும் மசூதியின் ஏந்தி
வாசலில் கிடந்த சிம்மாசனம்
சுவர்சித்திரம்
அழகு சாதனக் கடையின் விளம்பரப் பலகையில் அழகாய் வரயப்பட்ட பெண்ணின் ஒவியம்
ஒளிதரும் விளக்கு
வருசையாய் வாகனம் - காக்க வைக்கும் சிவப்பொளி
அகண்ட சாலையில் பாதசாரியை கடக்க வைத்த பச்சை ஒளி
கடந்த்து சென்ற சாலையின் பதிவான பதிப்புகள்
என் புகைப்படம்
என் கவிதை
என் நடைபயணம்
பாதசாரி

எழுதியவர் : காவேரி நாதன் (24-Aug-20, 2:24 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 84

மேலே