கட்டுப்பாடு
பார்த்து ரசித்த உன்னை
பக்குவ பட்ட பின்
பயங்கர நிகழ்வுக்கு பயந்து
விரிசல் இல்லாமல் விலகிப்போக
விரிவான திட்டமிட்டேன்
திட்டம் யாவும் தவுடாக
உன்னை கண்டதும்
தண்ணீரில் கரைய
பசியுடன் உள்ள பசு
அரைக்காமல் விழுங்கியதுபோல் ஆனபோதும்
எப்போதும் போல் பாராமல் அப்பப்போ பார்ப்பதில்
தவறில்லையென தன்னை தானே தேற்றிக்கொண்டேன்
நுயூட்டன் விதியும் பொய்யா வண்ணம் சிறு பொழுதிலே
எந்தன் கட்டுபாடு விட்டுபொடுயென
புலன் அனைத்தையும் புலம்பச்செய்தாய்
புலன் ஒவ்வொன்றாய் கட்டலையிட்டு
கண்ணிலிருந்து உணர்ச்சி வரை
ஒவ்வொரு நொடியும் உன்னை காணா வண்ணம்
கனா கூட கானாத நிஜமான பொழுதுகள்
என் உணர்ச்சியுடன் நானே சண்டையிட
ஒவ்வொரு நொடியும் ஜெயிப்பது என்னவோ
நீ தான்
கண்டதால் வந்த வியாதியை
உன்னை காணாமல் இருந்தால் போகும் என்று
உன்னை காண திருப்பதே வியாதியென
கட்டுபடுத்த பட்ட சலனப்படும்
சர்க்கரை வியாதி வந்தவரின் எண்ணம்
இனிப்பில்லா சர்க்கரையுடன்.