மொழியால் இணைவோம்
நெறி தவறும்
நெஞ்சம்
கொண்டோர்
முறை தவறி
ஆற்றும்
செயல் இன்று !
தாய்மொழி
வழிக்கல்வி
தவறென்று
சிறுமதியார்
தீண்டுகிறார்
சீண்டுகிறார் !
அகவை
ஈராயிரம்
கடந்த மொழி
அகிலத்தின்
மூத்த மொழி
எங்கள் மொழி !
வளைந்து
நெளிந்து
வழி தேடுகிறார்
அறியாத
மொழியை
திணித்திடவே !
எதிரிகளல்ல
எம்மொழிக்கும்
என்றென்றும்
தமிழரென்பது
தரணி அறிந்த
தகவல் அன்றோ !
தம்மொழி
காத்திட
செம்மொழி
தமிழ் மொழியை
சாய்க்க நினைப்பது
வஞ்சகம் அன்றோ !
அதிகாரம்
உள்ளதென்று
ஆதிக்கம்
செலுத்துவது
மமதையின்
உச்சமன்றோ !
இருமொழிக்
கொள்கையை
இருட்டடிப்பு
செய்வோரே
இரட்டைவேடம்
தரிப்பதேனோ !
அவரவர்
தாய்மொழி
அவரவர்க்கு
முதன்மை எனில்
எங்கள் மொழியை
தூற்றுவது ஏனோ ?
சிந்திப்பீர்
தமிழினமே
வருந்தாதீர்
வந்தபின்பு
ஏற்காதீர்
மொழி திணிப்பை !
விரும்பும் மொழியை
விரும்பியபடி கற்றிடுக
இனிதான நம்மொழியை
கனியாக சுவைத்திடுக
இறுதிவரை கைவிடாது
உறுதியாய் வளர்த்திடுக!
மொழியால் இணைவோம்
இனம்காத்து இன்புறுவோம் !
பழனி குமார்
25.08.2020