கவிதாநதி தீரத்திலே 1
----------------------கவிதாநதி தீரத்திலே----------------- 1 ---௧
நான் விரும்பிப் படித்து ரசித்த இலக்கிய அழகுகளை உங்களுடன்
தொடர்ந்து பகிர்ந்து கொள்வது இந்த எண்ணத்தின் நோக்கம் .
தோற்றுவாயாக கம்பனினின் விருத்தப் பாவினும் ஓரிழை
மேலோ என்ற என்ன மயக்கத்தை எனக்குத் தந்த வெண்பா வேந்தன்
புகழேந்தியின் நளவெண்பாவிலிருந்து ஒரு சில பார்ப்போம் .
அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி யனையர் மணிநடையும் --விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்தார் மன் .
விரிந்த வருணனைப் பொருள் :
---ஓர் அழகிய அன்னம் நிடத மன்னன் தோட்டத்தில் உலவ
பணியாட்களை கொண்டு பிடித்து வரச்செய்கிறான் .
நளன் கையில் அன்னம் அஞ்சி ஒடுங்கி நிற்கிறது.
போர் மன்னர் அருகில் இருக்க மக்களே அச்சமற்று இருப்பார்கள்
அப்படியிருக்க மன்னன் கைப்பிடித்த சிறு பறவை நீ அஞ்சுவது
ஏனோ ? அஞ்ச வேண்டாம் அன்னமே ! உன்னை நான் ஏன்
பிடித்து வரச் செய்தேன் ? உந்தன் அழகிய நடையிலும்
இந்த நெஞ்சில் தனக்கு யாரும் நிகரில்லை என்ற இறுமாப்பில்
உலவும் விழிப்போர்ப்படை வஞ்சியர் நடையிலும் சிறந்தது
என்று ஒப்பிட்டுக் காணவே பிடித்து வரச் செய்தேன்
IT IS JUST TO COMPARE YOUR BEAUTIFUL WALK WITH
THESE FEMALE WALK DAME DEAR அன்னமே
என்றான் களி வண்டார்க்கும் மலர் மாலை அணிந்த மன்னவன் .
ஒப்பிடல் :
அரசு அன்னம் நாண நடை பயிலும் பதாம் புயத்தாளே என்று
போற்றுவார் கலலைவாணியின் நடையை குமரகுருபரர் தன்
சகலகலா வல்லி மாலையில் .
அன்னத்தின் நடையை பெண்களுக்கு ஒப்பிடுவது பழைய
இலக்கிய வழக்கம் . சங்கரரின் சௌந்தர்ய லஹரி துதிக்கவிதை
யிலும் இப்படி ஒரு ஒப்பிடல் இருக்கிறது. பின்னால் பார்ப்போம் .
அன்னம் MYTH BIRD என்பர் . தற் காலங்களில் அன்னமெல்லாம்.
இல்லை. அன்னம் என்றால் சாப்பாடு போஜனம் அவ்வளவுதான்.
இந்தக் காவியத்தில் அன்னம் பேசவும் செய்கிறது.
தற்கால நோக்கில் :
அன்ன நடை சின்ன நடை பின்னல் சடை என்று சினிமா
கவிஞர்களும் எழுதிக் கொண்டிருந்தனர் .
இப்பொழுது அன்ன நடையும் இல்லை பின்னல் சட்டையும்
இல்லை . ஜீன்ஸ் டாப்பில் எல்லாம் மிலிட்டரி மார்ச் தான் !
தற்காலங்களில் பெண்கள் போலீசிலும் ராணுவத்திலும்
பணிபுரிகிறார்கள் அன்ன நடை நடந்து கொண்டிருந்தாள்
பிக்பாக்கெட் காரனை பிடிக்க முடியுமா ?
எதிரி நாட்டுக்காரன் உள்ளே நுழைந்துவிடமாட்டானா ?
ஆதலினால் காலத்திற்கேற்ற நடை சரிதான் !
கேள்வி :
அஞ்சல் மடவனமே உன்றன் ----மட வன்னமே என்று தானே
இருக்கவேண்டும் புகழேந்தியும் ஒற்றுப்பிழை செய்துவிட்டாரா ?
நற்றமிழ் அறிந்தோர் விளக்க வேண்டுகிறேன்