நெஞ்சத் தாழ் திறவாயா

குளிரிலும் மனம் வெந்து சாகுதடி
வெயிலிலும் குளிர் வந்து மூடுதடி
காற்றில் அசையும் அலையாய் வந்து
மோதும் என்னை வேர் சாய்க்கும்
உந்தன் ஞாபகங்கள்
செம்மலர் இதழே
செங்கனிச் சுவையே
பாழ் பட்ட என் நெஞ்சம்
கொஞ்சம் எழுந்து ஆள்பட
பூட்டிய உன் நெஞ்சைத்
தாழ் திறவாயா !
அஷ்றப் அலி