தூக்கம் தவறிய இரவுகள்

விண்ணில் நிலவு மண்ணை
நோக்கிய படி உலாவையிலே
எண்ணற்ற மகிழ்வோடு
குடும்பமே திண்ணையிலே
உறங்கும் வேளையிலே.....///

இரைச்சலோ சிறு விமானம்
இறக்கியதே பல வெடிகள்
இருண்டது இன்பம் எழுந்தது
இறைவா என்னும் ஓலம்....///

சிதறியது குடும்பம் வாரிச்
சுருட்டியபடி திசை அறியாமல்
கால்கள் எடுத்தது ஓட்டம்.
காடு மேடு கடக்கையிலே
இரவுத் தூக்கம் ஏது....///

கண்ணும் கருத்துமாக
வளர்த்த பிள்ளை தவறிய
பின் கண்ணில் உறக்கம் ஏது
தவிப்போடும் துடிப்போடும்
பயத்தோடும் ஓடும் போது
தூக்கம் என்பது ஏது தூக்கம்
மறந்த இரவுகள் ஏராளம்.....///

பசியில் வதங்கியே
வயிறும் குடலும் எரியும்
போது தேடி வருமோ
விழியில் தூக்கம்....///

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (25-Aug-20, 6:48 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 223

மேலே