எங்கே நம் மனிதநேயம்
எங்கே நம் மனிதநேயம்?
******************************
ஒன்றாய் குலவி
மகிழ்ந்து வாழ்ந்தோம்
ஒற்றுமையாய் இணைந்து
ஒளி வீசினோம்
இன்று எங்கே சென்றது நம் மனிதநேயம்?
மொழியில் இல்லை
பாகுபாடு என அறிந்தோம்
மொழிதலில்
தான் வேறுபாடு என உணர்ந்தோம்
இன்று எங்கே சென்றது நம் மனிதநேயம்?
பேதமில்லை பிரிவுமில்லை
சாதியுமில்லை
சமயமுமில்லை
காக்கை குருவி
எங்கள் சாதி என்றோம்
இன்று
எங்கே சென்றது நம் மனிதநேயம்?
அன்பு தான்
உயிர்க் காற்று
அறிந்துப் பெற்றோம்
அமிர்தத்தின் ஊற்று
இன்று எங்கே சென்றது நம் மனிதநேயம்?
இயற்கையை வணங்கினோம்
இறையாக
இசைந்து வாழ்ந்தோம் முறையாக
இன்று எங்கே சென்றது நம் மனிதநேயம்?
மாற்றானுக்கும்
மதிப்பு தந்தோம்
மாண்புகளை மதித்து சென்றோம்
இன்று எங்கே சென்றது நம் மனிதநேயம்?
சரவிபி ரோசிசந்திரா