இரண்டகம்
இரண்டகம்
○•○
○○ அம்மா வந்து அப்பாவை மரியாதை குறைவாக நடத்துறாங்க;
அது ராங்கா தெரிவதால் அம்மாவை பிடிக்காது;
அப்பா வந்து அம்மாவை எடுத்ததுக்கெல்லாம் அடிக்கிறார்;
அதனால் எனக்கு அப்பாவையும் சுத்தமா பிடிக்காது;
ஆனால் அவங்க இரண்டு பேருக்கும் என்னைப் பிடிக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது;
அவர்கள் இரண்டு பேர் மேலும் சந்தேகம் இருக்கிறது;
ஏன்னா அவங்க இரண்டுபேரும் என் மேல் காட்டும் அன்பு நிஜமானதா இல்லை நடிக்கிறாங்களா என்று சந்தேகமாக இருக்கு;
அதனால் நான் சந்தோஷமாக இல்லை என்பதை;
அவர்கள் இரண்டுபேருக்கும் புரியவைக்கும் வயதில் நான் இல்லை;
முன்னூற்று அறுபத்து ஐந்து நாளும் இந்த வீட்டில் சண்டையும் சச்சரவுமாக; கூச்சலும் குழப்பமுமாகத்தான் இருக்கிறது
அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே; அவங்க நம்மை கேவலமானவங்க; என்று நினைக்கமாட்டாங்களா என்று அவங்களுக்கு கவலை இல்லை கேவலமா பேசுவதை என் காதுப்பட கேட்டு உயிரை விட்டுக்கொள்ள வேண்டும் போல் தெரியும் ஆனால் வழி தெரியவில்லை என்ன செய்ய○○ என்று மகன் மனம் உருகினான்
அப்பா அம்மாவோடு இருக்க குழந்தை விரும்பவில்லை;
அதனால் அம்மாவால் ஒதுக்கப்பட்ட அம்மச்சியோடு இருக்க;
யாருக்கும் தெரியாமல் புறப்பட்டு சென்றான் குழந்தை ;
பொதுவாக கோபுரங்கள் சாய்வதில்லை என்பார்கள்;
ஆனாலும் இடிந்து வீழ்கிறது காரணம்; பராமரிக்க நாதியில்லை;
அதே நிலை அந்த பச்சிளம் குழந்தைக்கு அது கெட்டு குட்டிச்சுவராவதற்கு இதுதான் முதல் படி....அதாவது... ஆரம்பம் ;
குழந்தை நினைக்கிறது;
ஒரு வேளை நான் இவர்களுக்கு பிறக்கவில்லையோ;
அநாதை இல்லத்தில் இருந்து என்னை தத்தெடுத்து வளர்க்கிறார்களோ; அல்லது எங்கேயாவது அனாதையாக கிடந்து தூக்கி வந்து வைத்து வளர்க் கிறார்களோ அதனால் தானோ என்மீது அன்பு காட்ட மறுக்கிறார்கள்;
அக்கரை காட்ட மறுக்கிறார்கள்;
இவர்களே என்னை பெற்றவர்களாக இல்லாத போது அம்மச்சி மட்டும் எனக்கு எப்படி சொந்தமாகிவிட முடியும் என்னை எங்கிருந்து தத்து எடுத்தார்களோ அவர்கள் மூலமாக தெரிந்து கொண்டு அங்கேயே நான் போய் சேருவதில் தான் எனக்கு நிம்மதி என்று ஒரு முடிவோடு மீண்டும் வீட்டுக்கு வருகிறான்
அங்கே அப்பா வுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்தபடி இருக்கிறது வாக்கு வாதம் கச்சேரியில் நடப்பது போல் நடந்து கொண்டிருக்கக் கண்டு கதவு பக்கத்தில் மறைந்து கொண்டான்
அப்பா அம்மாவிடம் எங்கே உன் உத்தம புத்திரன் என்று கேட்டார்
உன் பிள்ளையை என் பிள்ளையைப் போல் பார்த்து கொள்வேன் என்று என்னிடம் சத்தியம் செய்தீர்கள்; அதனால்தான் நானும் சரி இருந்து விட்டு போவோம் என்று சம்மதித்தேன்;
அப்போ...என்னோட அப்பா இவர் இல்லையா...அதான் என் மேல் வெறுப்பை காட்டுகிறார் என்று குழந்தை நினைத்து வருந்தினான்
இப்போது உன் புத்திரன் என்று பிரிச்சி சம்மந்தம் இல்லாதவர் போல் கேட்கிறீங்க; இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை இது ஞாயமும் இல்லை என்கிறாள் அம்மா
அதற்கு அது இல்லை; என்காலத்திற்கு பிறகு இருக்கும் என் சொத்தில் எவனுக்கோ பிறந்தவனுக்கு போய் சேருமே என்று யோசிக்கிறேன்;
அதை என்னிடம் சம்மதம் கேட்ட அன்றே யோசித்து இருக்க வேண்டும்;
இன்று யோசித்து என்ன பிரயோசனம்; என்னை ஏமாற்றி விட்டதாக உணர்கிறேன்; இரண்டகம் செய்ய துணிந்து விட்டபோது யாரையும் நிந்தித்து யாருக்கு என்ன லாபம் ஒன்னும் இல்லை
இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்தவள்;
இருக்கும் நாளை ஒருத்தியாய் வாழ்ந்து முடிக்க இந்த சமுகம் விடாது என்கிற ஒரே காரணத்துக்காகவே;
ஒப்புக் கொண்டேன் இந்த குழந்தையை காப்பாற்றி கரைசேர்க்க கிடைத்த படகாக நினைத்து ஒப்புக்கொண்டேனே தவிற;
கொழுப்பை உருக்கிக்கொள்ள இல்லை;
நல்ல வேளை உன்னோட குழந்தைக்கு காலத்தை தள்ளி வைக்க நேர்ந்தது;
அதிலும் நீ ஒருவார்தை சொன்னாய்;
எனக்கு குழந்தை குட்டி பெத்துக் கொடுக்க வேண்டாம்;
எனக்கு சமைத்து மட்டும் கொடுத்தால் போதும் என்று;
சொன்னதால் தான் சம்மதம் தெரிவித்தேன்;
இப்போது சமயத்திற்கு தகுந்தார் போல் மாற்றி பேசுவதை விடுங்கள் என்றாள்
அவனது நோக்கம் என் மூலம் ஒரு குழந்தை பெற்றுதர வழியை வகுத்திருக்கலாம் குறுக்கே பாறை கிடைத்தது அதை எதிர் கொள்ள அவனால் முடிந்திருக்காது அதனால் அவளை கழட்டி விடும் நோக்கமாக இருக்கலாம்
மகன் அம்மாவுக்கு முன் எதிர் பட்டு அம்மா நம்பக்கூடியதை நம்பல நம்பக் கூடாததை நம்பறீங்க அதாவது நம்பளால தனியா வாழ முடியும் எங்கிற நம்பிக்கையை நீங்க நம்பலமா அவங்கள நம்பினா பொழைச்சிக்கலாம் இவங்கள நம்பினா பொழைச்சிக்கலாம்னு நம்புறது மூடத்தனம் எங்கிறது இப்போதாவது தீர்க்கமா தெரிஞ்சி கிட்டீயா இல்லையா கெளம்புங்க இந்த ஆளை நம்பி உங்கள பெத்த அம்மாவையே ஒதுக்கி வச்சீங்க இல்ல அதுக்கு கெடச்ச தண்டனை இது
மகன் சொன்னதைக்கேட்டு மனம் நெகிழ்ந்து கண் வடித்தாள் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடினாள் தாய்
ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை நீ இருக்கும் போது பிறரை நம்பியது என் குற்றம் தான் என்று அவ்விடத்தைவிட்டு புறப்பட்டாள் அவளால் புறக்கணிக்க ப்பட்ட அவளின் அன்னையிடம்
அப்போது ஒரு அம்மையார் வந்து சம்பூரணியம்மா எங்க வீட்டுக்காரை அடுத்த இடத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க அங்கே கோட்ரசும் கெடைச்சி இருக்கு அதனால் நான் என் பொண்ணு கல்யாணத்திற்கு பணம் முடையாகிவிடும் போல் இருந்தது அந்த சமயத்தில் பணம் 25000/- உங்ககிட்ட வட்டிக்கு வாங்கினேன் இல்லையா இப்போது வீட்டைக் காலி செய்ய வைத்து கிடைத்த முன்பணத்தில் உங்ககிட்ட வாங்கின பணத்தை திருப்பி கொடுக்க வந்தேன் கொஞ்சம் வெளியில் வரீங்களா என்றார்கள்
அவர்கள் பேசிக்கொண்டதை ஒதுங்கி நின்று கேட்டு மகளுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது எதுவும் தெரியாதவள் போல் இருந்து கொண்டாள்
அம்மச்சி என்று சத்தம் கொடுத்தான் பேரன்
டேய் பேராண்டி இங்க எப்படிடா வந்தே தனியாவா வந்தேன்னு கேட்க மகள் தலையை காட்டினாள்
வாம்மா வா
அம்மா என்னை மன்னிச் சிடுங்கம்மா
அந்த ஐயோக்கியனை நம்பி உங்க கிட்ட மரியாதை கொரவா பேசிப்புட்டேன் இப்ப தான் தெரிஞ்சது அவனோட சுயரூபம் போடா நீயுங்கெட்ட உன் சவகாசமும் கெட்டதுன்னு வந்துட்டேம்மா
டேய் டேய் அழக்கூடாது நீ குழந்தையா இருந்தப்போ என் நெஞ்சிலேயே எட்டி எட்டி ஒதைப்பே ஏங்கொழந்தைய நான் விசிரியா அடிச்சிட்டேன் அப்போ இல்ல இப்பக்கூட நீ எனக்கு குழந்தை தாம்மா நீ வா வா வா உள்ள வா அழாதேன்னு இப்போதானே சொன்னேன் போ உள்ள போ
கொடும்மா....ம்...இந்த மாச வட்டி சரி சரி ஒன்னும் வேணாம் பணத்தை மட்டும் கொடு என்று வாங்கிக் கொண்டு அந்த பணத்தை தன் மகள் கையில் கொடுத்து இந்தா இனி உலகத்தை நம்மாதே உன்னோட ஆம்படியானையும் நம்பாதே என் பேரன் ஏங்கிட்ட எல்லாத்தையும் சொன்னான் இனி உன்னை நீ நம்பு இந்த பணத்தை வைத்து ஒரு கடைய கிடைய வச்சி பொழைச்சிக்கோ
ஏதுமா இவ்வளவு பணம் நீ அவனை நம்பி என்னை வீட்டை விட்டு தலை முடியை பிடித்து தரதரவென்று இழுத்து வந்து தெருவில் விட்டாயே அன்று தான் உங்க அப்பா என் பெயரில் எல். ஐ. சி. ஐம்பதாயிரம் போட்டு கெடுமுடிந்து கொண்டுவந்து கொடுதார்கள் அன்று நீ பெத்த தாயின்னு கூட தயவு தாட்சண்யமின்றி என்னை அவமானப்படுத்த அந்த கோபத்தில் அதை உனக்கு சொல்ல மனம் தடுத்தது அதைவைத்து வட்டிக்கு விட்டு ஒரு லட்சம் வரை சம்பாதித்து விட்டேன் இந்தா போய் சொன்னபடி செய் என்று அடைக்கலம் கொடுத்தாள் அவளின் அன்னை
அவளது இரண்டாவது கணவன் சூதாட்டத்தில் கையில் இருந்த பணத்தை தோற்று நிலத்தை விற்கும் நிலைக்கு வந்து விட்டான் விட்ட பணத்தை பிடிக்கனும் என்னும் வைராக்கியத்துடன் இருந்தான் அதோடு கௌரவ குறைச்சல் ஆகிவிடுமோ எங்கிற பயமும் அவனை எதையும் இழக்கத் துணிந்த தனால் வந்த விளைவு ஓட்டாண்டி ஆக்கிவிட்டான்
அவனது மனைவி தன் அம்மா விடம் சொன்னாள் அம்மா தன் பாலிய சிநேகிதி பெயரில் அந்த நிலத்தை வாங்கி பின் அவளின் மகள் பெயரில் மாற்றிக் கொண்டாள்
எல்லாவற்றையும் இழந்து ஊரைவிட்டே ஓடிவிட்டான்
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.