நிலைத்து நிற்கும் சூரியனைப் போல

மரணித்த மனிதர்களின் நிலைத்த உறக்கமாய்
உம் எதிர்ச்சிந்தனை துளிகள் உறங்கட்டும்
பலுகிப் பெருகும் புற்றீசலாய்
நேர்மறை எண்ணங்கள் பெருகட்டும்

புவி எங்கும் பரவி இருக்கும் காற்றாய்
பல்லுயிர்களுக்கு உணவளிக்கும் இயற்கையாய்
நீடித்த புத்துணச்சி தரும் தென்றலாய்
தஞ்சம் அடைந்தவருக்கெல்லாம் இடமளிக்கும் மரமாய்

வகைப்பட்ட அறுசுவை உணவளிக்கும் காடாய்
மூலிகை வளத்தால் குணமளிக்கும் அருவியாய்
இயற்கைக்கு வாழ்வளிக்கும் மழையாய்
பிறரின் இருள் அகற்றும் பகலவனாய்

உதவும் கரம் நீட்டுபவராய்
திறந்த மனம் கொண்டவராய்
காயப்பட்ட மனதுக்கு மருந்தாய்
திசை மாறி சென்றவர்களுக்கு கலங்கரை விளக்காய்

நீடித்திருக்கட்டும் உம் அருஞ்செயல்கள் சூரியனாய்!

எழுதியவர் : அமல்ராஜ் (27-Aug-20, 2:44 pm)
சேர்த்தது : Amalraj
பார்வை : 167

மேலே